பயனர்:நல்வினை விஸ்வராஜு/மணல்தொட்டி

திருமணி முத்தாறு


சேலத்தின் கூவம் அல்ல தமிழகத்தின் புன்னிய நதி

சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு மலையில் பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் நகரத்தில் நுழைந்து சேலம் நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 120 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே நஞ்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது.

பவுனாறு அல்லது தங்க நதி: சேர்வராயன் மலையில் குருமம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உற்பத்தியாகும் கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்க நதி சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் மேம்பாலம் அருகில் கோனேரிகரை என்ற இடத்தில் திருமணிமுத்தாற்றில் கலக்கும் துணை ஆறு ஆகும்

பொன்னி ஆறு: மகுடஞ்சாவடி அருகில் உற்பத்தி ஆகும் பொன்னி ஆறு பருத்திபள்ளி என்ற ஏரியில் திருமணிமுத்தாற்றில் கலக்கும் துணை ஆறு ஆகும்

போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதி அல்லது போதமலை ஆறு (கொல்லிமலையில் உற்பத்தியாகும் கோரையாறு, பாலாறு, பழனியப்பார் கோவில் ஆறு செங்குட்டை ஆறு ஆகியவை இணைந்து) கூடசேரி அருகில் திருமணிமுத்தாறில் கலக்கின்றது

திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. 25 அணைகள். 290 ஏரிகள் திருமணிமுத்தாற்றின் நீரை நம்பியுள்ளது

சேர்வராயன் மலையின் தெற்கு, மேற்கு பகுதி, கொல்லிமலையின் மேற்கு பகுதி, போதமலை, அலவாய்மலை கஞ்சமலை, ஜல்லூத்து மலை, பெருமாள் மலை, நைனாமலை, பசிரிமலை, சொரிமலை, உள்ளிட்ட சிறு மலை பகுதிகளில் பெய்யும் மழை நீர் பல ஓடைகள் வழியாக ஏரிகளை நிரப்பி கடைசியில் திருமணிமுத்தாறில் சங்கமிக்கின்றது.

திருமணிமுத்தாறு தொன்மையான நதி. மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்றெல்லாம் அது அழைக்கப்பட்டது.

ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக் கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றைக்கும்கூட அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது.

சேலம் ஸ்தல புராணத்தில் பாடப்பட்ட பாடல் ஒன்று ‘சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்கிறது.

திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை.

இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.

திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றளவும் அங்கே அள்ள அள்ளக் குறையாமல் இரும்பு, மேக்னசைட், குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது. ஒருகாலத்தில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது எனச் சொல்கிறாகள். திருமணிமுத்தாற்று நீர் வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். சேலம், உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் வெல்லமும் நெய்யும் இலங்கைக்குச் சென்றன. வாழ்வாங்கு வாழ்ந்தது திரு மணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.

போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதி அல்லது போதமலை ஆறு (போதமலையில் பெய்யும் மழை நீர்) ஆலத்தூர் ஏரி பட்டணம் ஏரி கோனேரிப்பட்டி ஏரி தட்டான்குட்டை ஏரி அணைப்பாளையம் ஏரி, (இராசிபுரம் ஒன்றியம்) ஏகே.சமுத்திரம் ஏரி, கல்யானி ஏரி, நவனி ஏரி, ஏழூர் ஏரி, (புதுசத்திரம் ஒன்றியம்) முசிரி ஏரி, புதுர் ஏரி (எலச்சிபாளையம் ஒன்றியம்) பிராந்தகம் ஏரி, (நாமக்கல் ஒன்றியம்) இரட்டனை ஏரி வழியாக கூடச்சேரியில் ( பரமத்தி ஒன்றியம்) இறுதியில் திருமணிமுத்தாற்றில் கலக்கின்றது