அன்னை தெரேசா

முன்னுரை:

    அன்னை தெரேசா( Mother Teresa) ஆகத்து மாதம் 26-ஆம் நாள் 1910-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரேமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950-ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற  கத்தோலிக்க தறவற சபையினை நிறுவினார்.

தொடக்க வாழ்கை:

   அல்பேனியாவின் ஷ்கேடரின் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜோக்சியுவின் குழந்தைகளில் இனளயவர் இவர். அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.1919-ஆம் ஆண்டில்,ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸீக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின்,அவரது தாயார் அவரை நல்லதொரு உரோமன் கத்தோலிக்கராக வளர்ந்தார்.பின் அவர்களது பன்னிரண்டு வயதுக்குள் துறவறம் புக முடிவு செய்து கொண்டார்.தனது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு  வெளியேறினார்.

பிறர் அன்பின் பணியாளர்:

   செப்டம்பர் 10,1946-ஆம் ஆண்டு கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு நேர்ந்த உள் உணர்வை அவர் பின் நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு  வெளியேறி,ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது(இறை) நம்பிக்கையை மறுத்தலிப்பதற்கு ஒப்பானது." என்ரார் அவர். 1948-ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார்.

"Our lord wants me to be a

Free nun covered with the
Poverty of the cross...
Today I learned a good 
Lesson. The poverty of the
Poor must be so hard for
them. While looking for a
home I walked and walked 
fill my arms and legs 
ached. I thought how
much they must ache in
body and soul,looking for
a home, food and health.
Then the comfort of
Loreto [her former order]
Came to tempt me. 'You
have only to say the word
and all that will be yours
again', the Tempter kept 
On saying... Of free
choice, my God, and out
Of love for you, I desire to
remain and do whatever 
be your Holy will in my
regard. I did not let a
single tear come."

எனத் தொடங்கும் கூற்றை தனது நாட்குறிப்பில் எழுதினார்.

அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்:

     1982-இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.
     கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரைப் பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, உங்கள் வேளையைச் செய்தாக வேண்டும்" என்றார் அவர்.
    1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்தி வந்தார். நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பனியாளர் சபை வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் பிறர் அன்பின் பணியாளர்   சபை தெற்கு பிராங்க்ஸிலும், நியுயார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984 க்குள் இவ்வமைப்பு.

உலக அங்கீகாரமும் வரவேற்பும்:

இந்தியாவின் வரவேற்பு:

      1962-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல் பன்னாட்டு புரிந்தணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகனை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார். அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992 இல் வெளியிடப்பட்டது.

ஆன்மீக வாழ்வு:

      அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயர்சியும் அன்னை தெரேசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்" என்றார். அன்னை தெரேசா இறை பிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசத்தைக் குறித்தும் ஆழமான சந்தேகங்ளைக் கொண்டிருந்தார்.

ஆரோக்கியக் குறைபாடு:

     1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சமையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்தருக்க செய்தார்.
      ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எழும்பு முறிந்தது. ஆகத்தில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரை பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது.

முடிவுரை:

    மார்ச் 13,1997-ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொருப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5,1997 இல் மரணமடைந்தார். கல்கத்தாவின் பேராயர் ஹென்றி செபாஸ்டியன் டி சோசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமென அன்னை தெரேசா எண்ணிய காரணத்தால் அன்னை தெரேசாவின் அனுமதியோடு அவருக்குப் பேயோட்டும்படி ஒரு குருவைப் பணித்ததாகக் கூறியுள்ளார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:நிவேதாதுரைராஜ்&oldid=2481172" இலிருந்து மீள்விக்கப்பட்டது