எனது அறிமுகம்..........

பாஸ்கரன் சின்னதும்பூர் ஆகிய நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள சிறிய ஊர் தான் எனது கிராமம்.சின்னத்தும்பூர்..இந்த சிறிய கிராமத்தில் பிறந்த நான் ஆரம்ப பள்ளியை எங்கள் ஊரில் இருக்கும் அரசு ஆரம்பள்ளியிலும், மேல்நிலை படிப்பை வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலை பள்ளியிலும் முடித்தேன். மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்த நான் 2007்ம் ஆண்டு எனது கல்லூரி படிப்பை பாண்டிசேரி மாநிலம் காரைகால் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி. எஸ் கலைகல்லூரியில் சேர்ந்து படித்தேன் இடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் அந்த படிப்பை தொடர இயலவில்லை. இடையில் இரண்டு வருடம் இடைவௌி விழுந்தது.இருந்தாலும் எனது முயற்சியை நான் கைவிடமல் 2010 ஆம் ஆண்டு திரும்பவும் எனது கல்லூரி படிப்பை தொடர நினைத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு திரு.வி.க கலை கல்லூரியில் விண்ணப்பித்தேன். கலந்தாய்வுக்கு உள்ள ஒருமாத இடைவௌியில் ஊர் கலவரத்தில் எனது கண்ணில் அடிப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் என்னால் இரண்டு கலந்தாய்வில் பங்கு பெற முடியவில்லை. இறுதியில் மூன்றாவது கலந்தாய்வில் பங்கு பெற்றேன்.ஆனால் நான் கேட்ட பாடபிரிவு கிடைக்க வில்லை கிடைத்ததோ இதழியல் துறை விருப்பம் இல்லமல் துறையை தேர்தெடுத்ததேன் வீட்டில் உள்ளவர்கள் இதழியல் துறை வேண்டாம் திரும்பவும் வேலைக்கு போ என்றனர்.ஆனால் கெட்டதிலும் நன்மை நடப்பது போல ஆரமபத்திலே இருந்து எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. சிறிய துண்டு பேப்பரை கண்டலும் அதை விடாமல் படிப்பேன் சிறு வயதிலேயே இருந்து திருமண பத்திரிக்கைகள் படிப்பது பழக்கம் . அதனால் மனதை தேற்றிக்கொண்டு படித்தேன் என் பெயருக்கு ஏற்றார் போல் அதிலும் வெற்றி கிடைத்தது. முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றேன். எனது நடவடிக்கைகளை பார்த்து எனது துறை தலைவி மோனிகா ஹெப்சிபா புஷ்பாய் என்னை மேற்கொண்டு என்னை படிக்க சொன்னார். குடும்ப வறுமை என்னை திரும்பவும் இழுத்தது. ஆனால் நான் உறுதியாக நின்று படிக்க நினைத்தேன் ஆனால் கையில் பணம் இல்லை. கல்லூரி விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் மேல் படிப்பு தொடர ரூ.13000 ஆயிரம் தேவைப்பட்டது. மீதி பணம் கிடைக்க எனக்கு உதவி செய்த கடவுள் யார் தெரியுமா என் அப்பா, அம்மா கூட செய்யவில்லை என் 70 வயது ஆன பாட்டி தள்ளதா வயதிலும் எனக்கு உதவி செய்தார் அதை நினைத்தால் இப்போதும் என் கண்களில் கண்ணீர் வருகிறது. அவர்களுக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. கிடைத்த பணத்தை வைத்து மனோன் மணீயம் சுந்தரனர் பல்கலைகழகத்தில் முதுகலை இதழியல் துறையில் மேற்படிப்பை தொடர்ந்தேன். சிறுவயதில் இருந்து வௌியில் தங்கி பழக்கம் இல்லதாதல் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் பழகிவிட்டது. எனக்கு கிடைத்த ஆசியர்களும் கடவுளாகவே எனக்கு தெரிந்தனர். படிப்பை அங்கும் முதல் வகுப்பில் முடித்தேன். பின்னர் ஒரு மாத இடைவௌியில் வேலைதேடிக்கொண்டே கிடைத்த வேலையை செய்து வந்தேன் பின்னர் என் முதலாமாண்டு மாணவன் முலம் வந்த ஒரு பத்திரிக்கையில் வேலைக்கு அறிப்பை பார்த்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றேன். தற்போது அங்கு பணியில் சேர்ந்துள்ளேன். இதுதான் எனது அறிமுகம்.