"கதிர் நிறைத்தல் "

பற்றி சொன்னாரு. அதாவது மக்களே அறுக்க தயாராக இருக்கும் வயலில் யார் வயலாக இருந்தாலும் (தங்களது வயலில் சாமி கும்பிடுவதை பெருமையாக நினைத்து அனுமதித்து விடுவார்கள்)வயலின் வடகிழக்கு மூலையில் வளர்ந்த கதிர்களை ஒரு கொத்து மாதிரி அளவில் அறுத்து வயலில் வைத்து சாமி கும்பிட்டு வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு பானையில் வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு கதர் எடுத்து பானையில் வைத்து நிறைக்கவேண்டும். பின்னர் எஞ்சிய கதிரை தாழ்வாரத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பலகை அடித்த இடுவலில் சொருகி வைப்பார்களும் அவைகள் விளைச்சல் இல்லா காலத்தில் சிட்டு குருவிகளுக்கு உணவாகுமாம்.


களம் பொழிப்பு

பல வயல்கள் உள்ள பண்ணையார்கள் தங்களது வயலின் அறுப்பு முடிவதை களம் பொழிப்பு என மங்களகரமாக கூறுவார்கள். வயல் சொந்தக்காரர்கள் களம் பொழிப்பன்று நிறைய அவல் கொண்டுவந்து விரவி களத்திலயே எல்லா விவசாய தொழிலாளிகளுக்கும் விளம்புவார்கள்

ஒவ்வொரு மாவட்டமும் ஒரு வித்தியாசமான வகையில் விவசாயத்தை சிறப்பித்து இருக்கிறார்கள்.

எவ்வளவு அதிக உற்பத்தி ஆகி (வாங்கிற விலை குறைந்தாலும்) அதே அதிக விலையில் விற்க விவசாய பொருள் என்ன பெட்ரோலிய பொருளா அதிகம் விளைஞ்சாலும் நட்டம் விளையாம போனாலும் நட்டம் ....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிச்சுமணி&oldid=2469124" இலிருந்து மீள்விக்கப்பட்டது