புதுகை மனிதநேயம் அறக்கட்டளை தொகு

புதுகை மனிதநேயம் அறக்கட்டளை (Pudugai Humanity Trust) 2016இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசு சார்பற்ற தொண்டு அமைப்பு ஆகும். தரமானகல்வியை சமுதாயத்தின் அனைத்து தரப்பினற்கும் கொண்டுசேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு, சமூகத் தீமைகளை நீக்குவதற்கு கல்வி ஒரு மிகச் சிறந்த ஆயுதம் என்ற உறுதியான நம்பிக்கையை கொண்டு அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியைச் செய்து வருகின்றது. இந்த அமைப்பின் நிறுவனர் அ.நடராஜன்.பல்வேறு விளம்பரத்தாரர்கள் , ஊடகம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் இந்த அமைப்பிற்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன
நிறுவனா் அ.நடராஜன்
வகை மனிதநேயம் அறக்கட்டளை
நிறுவப்பட்டது 10ம் பிப்ரவாி2016
நிலை பணியில் உள்ளது
முகவரி எண் 5638,சாந்தநாதபுரம் 6ம் தெரு,
புதுக்ேகாட்ைட, – 622 001,
தமிழ் நாடு, இந்தியா
தொலைபேசி எண் 91-9688108538
அலைபேசி எண் 0422-223402
மின்னஞ்சல் முகவரி phtrust.in@gmail.com
இணையதளம் www.phtrust.in
பொருளடக்கம்
1வரலாறு
2 நோக்கம்: 2.1 குறிக்கோள்கள்:
3 நடவடிக்கைகள்:
3.1விதை:,
3.2வழிகாட்டிகள்:,
3.3கற்றல் நிலையங்கள் :
4விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: 5 எதிர்கால திட்டங்கள்:
6அடிகுறிப்பு:

வரலாறு

புதுகை மனிதநேயம் அறக்கட்டளை (Pudugai Humanity Trust) 2016இல் அமைப்பின் நிறுவனர் அ.நடராஜன் அவா்களால் ஆரம்பிக்கப்பட்டது. 2016 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன் கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக துவக்கப்பட்டது. 2016இல்புதுகை மனிதநேயம் அறக்கட்டளை 200க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நம் நாட்டின் பொறுப்பான குடிமக்களாக உருவாக்க அனைத்து அம்சங்களிலும் பயிற்சி அளிக்க தொடங்கியது.[2] ஏற்கனவே நிறுவனர் அ.நடராஜன் அவா்களின் நண்பா்- நிறுவிய “ சித்தா் அறக்கட்டளை” மூலம் மேல்நிலை தேர்வுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளாக அவர் செய்து வந்த சேவையை இப்போழுது அ.நடராஜன் மற்றும் ெசயலாளா் வீரபாண்டியன் மற்றும் உறுப்பினா்கள் ேமற்ெகாண்டு ெசய்து வருகின்றனர். [3] தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் இருந்து இப்பணியை ஆதரவளிக்க தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


நோக்கம்:
சமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு தரமான கல்வியை அளிப்பதே முதன்மையான நோக்கமாகும்.

குறிக்கோள்கள்:
தேவையுள்ள கல்வி நிறுவனங்களை அடையலாம் கண்டு அங்கே வசதிகளை மற்றும் ஆசிரிய தரத்தை உயர்த்த முற்படுவது. கிராமப்புற மக்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கவது. தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிச் செய்வது. பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியை கண்காணித்தல். கிராமபுரங்களில் கல்வி நிலையங்களை அமைத்து , அவ்வாறு அமைக்கப்பட்ட நிலையங்களை செயல் படுத்தவும் கல்வி கற்பிக்கவும் விருப்பமுடைய நபர்களை அடையாளம் கண்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியும் தக்க உதவியும் அளித்தல். மாணவர்களுக்கு மென் திறன் பயிற்சியும் முழுமையான ஆளுமை வளர்ச்சியும் அளித்தல். பின் வரும் காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சியை பயிற்கும் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவுதல்.[4]

நடவடிக்கைகள்:[தொகு]
புதுகை மனிதநேயம் அறக்கட்டளை இச்சமூகத்தில் தலைநிமிர துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடி பிடித்து, அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகின்றது. இந்த அமைப்பு மக்களின் வாழ்கை மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கின்றது. வசதியற்ற மற்றும் ஆதரவு இழந்த மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் தகுந்த உதவிகள் வழங்கி முன்னெற்ற பாதைக்கு வழிகாட்ட முன்படுகின்றது.

விதை:[தொகு]

படிக்கும் திறனும் ஆர்வமும் கொன்டிருந்தும் , கல்விக் கனியைச் சுவைக்க இயலாத ஏழை மாணவர்களுக்கும் , நிதி உதவி வழங்க தயாராக இருக்கும் கொடையாளிகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக திகழ்வதே "விதை"யின் நோக்கம்.தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் மொத்த கல்விச் செலவை கணகெடுத்து தகுந்த உதவி கிடைக்குமாறு செய்வதே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொண்டர்களின் முதற்பணி. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் கோடை வழங்கும் புரவலரிடம் தாங்கள் உதவிவரும் மாணவரின் கல்வி பதிவுகள் அவ்வப்போது பகிரப்படும் . வழிகாட்டிகள்:[தொகு]

தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் கனவுகளையும் சிந்தனையும் மேருகேற்றும்படி இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் மாணவர்களின் பல்வேறு திறமைகளை மேம்படுத்த பயிற்சி அளித்து வருகின்றனர்.தற்போது சுமார் 13 கிராமங்களில் இந்த "வழிகாட்டுதல்" நடந்து வருகிறது.

' கற்றல் நிலையங்கள் :[தொகு]

கற்றல் நிலையங்களில் பாடத்திட்டத்தை மட்டுமில்லாமல் மென் திறன் பயிற்சி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.தற்போது இவ்வாறு தமிழகத்தில் பத்தி கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள்:[தொகு]

பிரலமான திரை நடிகர்களை கொண்டு புதுகை மனிதநேயம் அறக்கட்டளை நடத்திய ஒரு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு விளம்பரம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் ஒளிபரப்பபட்டது.

எதிர்கால திட்டங்கள்:[தொகு]
கிராமப்புற மாணவர்களுக்கு அரசாங்க வேலைகளுக்காக தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தல், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் கலை மற்றும் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்,சமூக சேவையில் ஈடுபடும் பிற அமைப்புக்களுடன் கைகோர்த்துச் சிறந்த கல்வி வசதிகளில் வழங்க முற்படுதல் போன்ற சில திட்டங்கள் எதிர்காலத்தில் அமல்படுத்தபடும் என்று அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.