புனிதா வீர்காத்
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் பிறந்தவர் புனிதா வீர்காத். இவரது தந்தையார் பெயர் இராம.கோபால். தாயார் ராஜேஸ்வரி அம்மையார்.இவருக்கு சுருளிமணி என்ற சகோதரியும், கதிரேசன் என்ற சகோதரரும் உள்ளனர். பள்ளிப் பருவத்திலேயே பத்திரிகைகள் வாசிப்பது, கண்ணில் பார்த்த சம்பவங்களை செய்தியாக பேசுவது என்பதாகவே இருந்துள்ளது. ஆரம்ப காலக் கல்வியை பண்ணைப்புரம் இந்து நடுநிலைப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை உத்தமபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்ற இவர், உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் பொருளாதாரம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர், மதுரை காமராசர் பல்கலையில், முதுகலையில் ஜர்னலிசம் மாஸ் கம்யூனிகேசன் பயின்று ஜெர்னலிஸ்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேவாரம் பகுதியின் தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு புனிதா ராணி என்ற மங்கையை மணந்த இவருக்கு சோனா என்ற மகளும் உண்டு. மனைவியின் திடீர் மரணத்தை தொடர்ந்து சென்னை தினத்தந்தி தலைமை அலுவலகத்தில் ஏ.எம்.என்.டிவி சேனலின் செய்தி ஆசிரியராக இரண்டரை ஆண்டுகாலம் பணி புரிந்த இவர். பின்னர் பாலிமர் தொலைக்காட்சி சேனலிலும் துணை செய்தி ஆசிரியராக பணி புரிந்தார். சமூகத்தில் மக்களின் பிரச்சனைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வதில் இவருக்கும், இவரது எழுத்துகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.