புவனேஸ்வரி06
Joined 7 மார்ச்சு 2018
என் பெயர் புவனேஸ்வரி.
இந்திய மக்கள் தொகை விவரம் பற்றி கட்டூரை;
5வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வீட்டை பட்டியலிடுதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டை பட்டியலிடுதலில், அனைத்து கட்டிடங்களை பற்றிய தகவல்கள் சேகரிப்பு ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கியது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கானத் தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காக சேகரிக்கப்பட்டத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இரண்டாம் கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011 பிப்ரவரி 9-28 இடையே நடத்தப்பட்டது.இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு, பெற்றோர் விகிதம், உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள், மொழி, மதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியவை பற்றிய விவரங்களை சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1872-லிருந்து இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.இந்தியா 29 மாநிலங்களும் 7 ஒன்றியப் பகுதிகளும் கொண்டுள்ளது. மொத்தம் 640 மாவட்டங்கள், 5,767 வட்டங்கள், 7,933 நகரங்கள், 600,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2.7 மில்லியன் அலுவலர்கள், 7,933 நகரங்களிலும், 600,000 கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று பாலினம், சமயம், கல்வி, தொழில் வாரியான மக்கட்தொகையின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தனர்.[2] இக்கணக்கெடுப்பிற்கான மொத்த செலவு தோராயமாக ₹2200 கோடிகள்(330 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். இது ஒரு நபருக்கு $0.50 ஐ விடக் குறைவானது. மக்கட்தொகைக் கணக்கெடுப்புக்கு ஒரு நபருக்கான உலகச் சராசரிச் செலவான $4.60 ஐவிட இது மிகக் குறைவாகவே உள்ளது.[2]அப்போதைய இந்திய நடுவண் அரசின் ஆளுங் கூட்டணியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் முலாயம் சிங் யாதவ் மற்றும் எதிர்க் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, அகாலி தளம், சிவ சேனா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியோரின் கோரிக்கைகளின்படி, சாதிவாரியான மக்கட்தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.[3] இதற்கு முன்னர் கடைசியாக இந்தியாவில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு 1931 (பிரித்தானியாரின் ஆட்சியில். முந்தைய கணக்கெடுப்பில் சமுதாய அந்தஸ்து கருதி மக்கள் தங்கள் சாதியை உயர்த்திக் கூறும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்பொழுது அரசு தரும் சலுகைகளுக்காகச் சாதிகளைக் குறைத்துக் கூறும் மனப்போக்கு காணப்படுகிறது.[4] 1931 க்குப் பின் 80 ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBCs) உண்மையான எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் பொருட்டு 2011 இல் சாதி அடிப்படையிலாக கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற கருத்து ஏற்பட்டுப்[5][6][7][8] பின்னர் சமூகப் பொருளாதார சாதி அடிப்படையிலான 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் கணக்கீட்டு விவரங்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் ஜூலை 3, 2015 இல் வெளியிடப்பட்டது.[9]