விழுதுகளின் மரக்கன்றுகள் நடும் விழா
படிமம்:Viluthugal.png
பெயர் : பெருமழை விழுதுகள் கிராமம் : மேலப்பெருமழை தாலுக்கா : திருத்துறைப்பூண்டி மாவட்டம் : திருவாரூர்

நமது இன்றைய தலைமுறைக்காக நல்ல கல்வி , தண்ணீர் மற்றும் சுற்றுசூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்காக நாங்கள் இருபது நபர்கள்    சேர்ந்து 2015- இல் மேலப்பெருமழை விழுதுகள் என்ற குழு துவங்கப்பட்டது. மேலும்  இந்த குழுவிலுள்ள அனைவரும் மாதம்தோறும் அவர்களது  சம்பளத்திருந்து  5% தரும் தொகையை மூலதனமாக வைத்து கொண்டு நிறைய மாற்றங்களை செய்து கொண்டு வருகிறோம்.

எங்கள் ஊரில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் விழுதுகள் சார்பாக மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் நாங்கள் வழங்கி, நட்ட கன்றுகளின் எண்ணிக்கை 15500 ஆகும். எங்கள் ஊரின் சாலை ஓரங்களில் 200 மரக்கன்றுகள் நட்டு அதற்கு கூண்டு அமைத்து பாதுகாத்து வருகிறோம்.

எங்கள் ஊர் மாணவர்களின் கல்வி மேன்பாட்டிற்காக அரசு தொடக்க பள்ளியின் அனைத்து வசதிகளும் செய்து தருகின்றோம். மற்றும் மூன்று ஆசிரியர்கள் நியமித்து சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். கடந்த ஆண்டில் பள்ளியில் விழுதுகள் தலைமையில் ஆண்டுவிழா நடத்தி கல்வியின் சிறப்பை எடுத்துரைத்து மற்றும் அவர்களது தனித் திறமையை வெளிகொணர்ந்து பாராட்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

எங்களின் அடுத்த செயல்பாடு எங்கள் ஊரில் நல்ல குடிநீர் கிடையாது அதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம்.

எங்கள் கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்கவேண்டும் என்பதே எங்களின் கனவு அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் இந்த செயல் ஒரு தனிமனிதனால் செய்யப்பட்ட மாற்றங்கள் கிடையாது ஒரு குழுவாக சேர்ந்து செய்யப்பட்ட மாற்றங்கள் அதனால் குழுவாக செய்தால் செய்யமுடியாத செயலே கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பெருமழை_விழுதுகள்&oldid=2446710" இலிருந்து மீள்விக்கப்பட்டது