மல்லிகை
மல்லிகை மலரின் மகத்துவம் அதில் உள்ள மருத்துவமும்
தற்போது மல்லிகைப் பூ சீசன் துவங்கியுள்ளது. மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக்கொள்ளவு ம், வாசனை திரவி யங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திரு ந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சி னைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக
பயன் படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்க ளை உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுப வர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல் லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சரு மத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்ப டும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண் டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவா க அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவ ர்கள் தவிர அனைவருமே இந்த மல்லி கைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை கா கிதம் போல ஆனதும், அவற்றை பொ டியாக அரைத்து பொடி செய்து வைத் துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டைஉண்டு வர நோய் எதிர்ப்புச்சக்தி உயரும் .
இது மட்டுமல்லாமல் அவ்வ ப்போது ஏற்படும் சில உடல் நல பிரச்சினைகளுக்கும் ம ல்லிகை சிறந்த நிவாரணி யாக உள்ளது. அதாவது, சில ருக்கு மல்லிகை வாசனை தலைவலி யை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குண மாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியா து. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக் களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்து விட்டால் தலைவலி காணாமல் போகு ம்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக் கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைக ளுக்கு அருமருந்தாக உள்ளது. எங்கே னும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித் து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தா லும், மல்லிகைப் பூவை அரைத்துப்பூசினால் வீக்கம் குறை யும்.
மன அழுத்தம், உடல் சூடு போ ன்ற பிரச்சினைகளால் பாதி க்கப் பட்ட பெண்கள், ஒன்றுமே செய் ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடி த்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போ தும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இது போன்ற பல மகத்துவங்களைக்கொண்டுள்ளது மல்லிகைபூ.