சிறு குறிப்பு

பெயர் : முனைவர் கிட்டு முருகேசன்

பெற்றோர் : கிருஷ்ணன் - சரசு

ஊர் : பொன்னன்விடுதி கிராமம்

வட்டம் : கறம்பக்குடி

மாவட்டம் : புதுக்கோட்டை

தொழில் : உதவிப்பேராசிரியர்

பணி புரியும் இடம் : டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 048

முனைவர் கிட்டு முருகேசன்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் பொன்னன்விடுதி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ரெ.கிருஷ்ணன் - சரசு தம்பதிகளுக்கு மூத்த மகனாக 05.06.1987 ல் பிறந்தவர். ஆரம்பப் பள்ளிக் கல்வியை உள்ளூரிலும் இடைநிலைக் கல்வியை வெட்டன்விடுதி அரசுப் பள்ளியிலும் பயின்றார். ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மையத்தில் (2007 ஆம் ஆண்டு), பி.ஏ., இளங்கலை த் தமிழ் பட்டம் பெற்றவர். முதுகலை (2009ஆம் ஆண்டு), ஆய்வியல் நிறைஞர் (2010ஆம் ஆண்டு) மற்றும் முனைவர் (2014 ஆம் ஆண்டு) ஆகியப் பட்டங்களை புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் பயின்றார். அப்போதைய தமிழக ஆளுனர் மேதகு ரோசையா அவர்களின் பொற்கரங்களால் பத்துப்பாட்டில் வாழ்வியற் செய்திகள் என்னும் பொருண்மையில் செய்த ஆய்விற்காக முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் 2014 முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டதோடு 25 க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல்வேறு மின்னிதழ்களில் சிறுகதைகளை எழுதிவருகின்றார். படைப்புத் தளத்தில் தன்னை நிலை நிறுத்தப் போராடி வரும் சிந்தனையாளர்.


==எப்படி பதிவது==

முனைவர் கி.முருகேசன்

13

தொகுப்புகள்