முனைவர் பப.பாலமுருகன்
மூலவர் : புண்ணியகோடியப்பர் உற்சவர் : திருவிடைவாயப்பர் அம்மன்/தாயார் : அபிராமி தல விருட்சம் : கஸ்தூரி அரளி தீர்த்தம் : ஸ்ரீ தீர்த்தம் ஆகமம்/பூஜை : சிவாகமம் பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : திருவிடைவாய் ஊர் : திருவிடைவாசல் மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு
திருஞானசம்பந்தர்
மறியார் கரத்து எந்தை அம்மாது உமையோடும்
பிரியாத பெம்மான் உறையும் இடம் என்பர் பொறிவாய் வரிவண்டு தன்பூம்பெடை புல்கி வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச் செவ்வான் மதிவைத்தார் சேர்வுஇடம் என்பர் எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே.
கரையார் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கைத் திரையார் சடைத் தீ வண்ணர் சேர்விடம் என்பர் குரையார் மணியும் குளிர்சந்தமும் கொண்டு விரையார் புனல்வந்து இழியும் விடைவாயே.
கூசத் தழல் போல் விழியா வருகூற்றைப் பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்றாம் வாசக்கதிர்ச் சாலி வெண்சாமரையே போல் வீசக் களிஅன்னம் மல்கும் விடைவாயே.
திரியும் புரம்மூன்றையும் செந்தழல் உண்ண எரிஅம்பு எய்தகுன்ற வில்லி இடம் என்பர் கிரியும் தருமாளிகைச் சூளிகை தன்மேல் விரியும் கொடிவான் விளி செய் விடைவாயே.
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத் தள்ளித் தலை தக்கனைக் கொண்டு அவர் சார்வாம் வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய் வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே.
பாதத்து ஒலிபார் இடம்பாட நடம்செய் நாதத்து ஒலியார் நவிலும் இடம் என்பர் கீதத்து ஒலியும் கொழுமும் முழவோடு வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே.
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப் பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம் கண்ணார் விழவிற் கடிவீதிகள்தோறும் விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே.
புள்வாய் பிளந்தான் அயன் பூமுடி பாதம் ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடமாம் தெள்வார் புனல்செங்கழுநீர் முகைதன்னில் விள்வாய் நறவு உண்டு வண்டுஆர் விடைவாயே.
உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர் கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர் அடையார் புரம்வேவமூவர்க்கு அருள்செய்த விடையார் கொடியான் அழகுஆர் விடைவாயே.
ஆறும் மதியும் பொதிவேணியன் ஊராம் மாறில் பெரும் செல்வம்மலி விடைவாயை நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன் கூறும் தமிழ்வல்லவர் குற்றம் அற்றோரே.
திருச்சிற்றம்பலம்