முனைவர் மா. மணிகண்டன்
தமிழர் வாழ்வில் இசையும் மழையும்
உலகில் எல்லா நிலத்திற்கும் வளத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது நீர். இது ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்று வகைப்படுத்தப் பெறுகிறது. மேலும் நீரின்இன்றியமையாமையை “நீரின்றி அமையாது உலகு” என்னும் பழமொழி உணர்த்துகின்றது. மேற்சொன்ன ஆற்று நீருக்கும் ஊற்று நீருக்கும் அடிப்படை வேற்றுநீரான மழைநீர். இந்த மழையை இசை மூலம் வருவிக்கும் கலையை அக்காலத் தமிழர்கள் கொண்டு விளங்கியுள்ளனர்.
இந்தியப் புராணங்களின் தத்துவப்படி இந்திரன் இடியை ஆயுதமாகக் கொண்ட மழைக் கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. இதனைத் திருக்குறள்
“ஐந்தவித்தா னாற்றால் ஆகல்விசும்பூ ளார்கோமான் இந்திரனே சாருங் கரி” (திருக்குறள்.25)
என்று உணர்த்துகிறது.
சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பிய இலக்கியங்களில் இந்திரவிழா பற்றியச் செய்திகள் உள்ளன. அவற்றுள் பூம்புகார் நகரில் மரபு விழாவான இந்திரவிழா கொண்டாடவில்லையெனில் மழை வளம் இருக்காது என்ற அச்சமும் நம்பிக்கையும் புகார் நகர மக்கள் மனதில் இருந்தது.
“தெய்வம் தொழால் கொழுநன் தொழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” (திருக்குறள்.55)
என்று கற்பின் பெருமையைக் கூறிய வள்ளுவர் தெய்வ ஆற்றலும், இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் பெண்களுக்கு இருந்தன என்பதை வள்ளுவர் விளக்குகிறார்.
இசையும் மழையும் கடவுளர்கள் உவக்கும் வண்ணம் இசை இசைக்கப்படி அதன் காரணமாக மழை பொழியும் என்பது வரலாற்று ஏடுகள், வாய்மொழி இலக்கியங்கள் வழி புலனாகின்றது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை பாடலில் முருகனை வாழ்த்தும் போது ஊது கொம்புடையவன், சிறிய பல கருவிகள் உடையவன் என்று போற்றுகின்றார். இங்கு மழைக்கான தெய்வமான இந்திரனைக் கூறாமல் முருகனைக் கூறுகின்றார். “குழலன், கோட்டான், குரும்பல் லியத்தின்” (திருமுருகாற்றுப்படை 209) “நீல்நிற விசும்பின் மலித்துளி பொழிய, ஒருவகை”
(திருமுருகாற்றுப்படை 116)
வானம் மழை வழங்கும் வண்ணம் வானம்பாடி பறவை மிக உயரத்தில் பறந்து பாடித் தேம்பி நிற்கும், அதன் காரணமாக மழை பொழிந்த நிலை சங்க இலக்கியத்திலேயே இருந்துள்ளது என்பதனை கடியலூர் உருத்திரங்கண்ணார்
“தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல்மாறி, வான் பொய்ப்பினும்” (பட்டினப்பாலை 3-5)
எனப் பாடுவதன் மூலம் அறியமுடிகிறது.
மழைக்காகவே வானத்தின் உச்சிக்கு சென்று பாடும் இயல்புடையது வானம்பாடிப் பறவை என்பதை
“துளிநசை வேட்கையரின் மிசை பாடும்புள்” (கலித்தொகை 46:120)
என வரும் பாடல் உணர்த்துகிறது. பாடல்களில் அத்தகைய ஆற்றல் அக்காலத்தில் இருந்தது என்பதனைப் பார்க்கும்போது இசைக் கூறுகளில் தேய்ந்திருந்த மக்களுக்கு இசை இயல்பான ஒன்று என்பது புலனாகின்றது. நாட்டுப்புறவியல் நோக்கில் கிராமப்புற மக்களின் நம்பிக்கை தெய்வமாக மாரியம்மன் சிறப்பாக வழிபடப் பெறுகிறாள். அவளே உயிர்களைப் பேணிக்காத்து நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றி நாட்டுக்கு நலம் தரும் மழையைப் பொழிபவளாகப் போற்றப்பெறுகிறாள்.
மாரியம்மனையன்றி யோகினி என்னும் தெய்வமும் மழை பொழிவிப்பவளாக மக்களால் போற்றப்படுகிறாள். “தொன்மத் தென்னிந்திய மரபுக் கதைகளில் மழை தருபவள் பெண் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறாள். இப்பெண் கடவுளே மழையைப் பொழிந்து உயிர்களைச் செழிக்கச் செய்பவள் என்று கருதினர். இப்பெண் தெய்வம் இசையில் நாட்டம் உடையவள். இசையால் மகிழ்பவள், மேலும் இவள் யாழை வாசித்துக் கொண்டே அந்தக் காலத்தில் தன்னை மறந்து லயித்திருப்பவள், இப்படி இசையெனும் வெள்ளத்துள் மூழ்கி யோகம் புரிந்து கொண்டிருப்பதால் இவனுக்கு யோகினி என்று பெயர்”1 என்றும் “இவள் திகம்பர வடிவினாள்: ஆடை அணியாது, பேரழகைக் காட்டி நிற்பவள், அவ்வாறு அம்மனமாக இருப்பதால் அமனி அமனநாச்சியார் எனவும் அழைக்கின்றனர். மேகம் கொள்ள வைக்கும் பேரழகு கொண்டிருப்பதால் யோகினி எனவும் அழைக்கப்படுகிறாள். இவளுடைய வாகனம் புலியாகும். இன்றும் பல கிராமிய தெய்வக் கோயில்களில் புலி மீது அமர்ந்து கொண்டு வீணை வாசிக்கும் நிலையில் உள்ள இவளுடைய அற்புதமான சிலைகளைக் காணலாம்”2என்று பூசை ச.ஆட்சிலிங்கம் எழுதிச் செல்வது மிகவும் சிந்திக்கத்தக்கது.
நாட்டுப்புறவியல் அறிஞரான நா.வானமாமலை மழை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளைச் செய்தவர். “வேட்டைக்காலத்தில் சடங்கா சாரங்களின் (ஏவைரயடள) விளைவாக நடனம் தோன்றியது. மழைவாழ் மக்கள் மழை வேண்டிச் செய்த மந்திரச் சடங்குகள் பல இடிபோல் இடிப்பதற்குத் தங்கள் வேட்டையாடிக்கொன்ற விலங்குகளின் தோலாலும் நரம்பாலும் செய்த பறைகள், கிணைகள் போன்றவற்றை முழங்கி ஆடினர். இது உலகம் முழுவதும் காணப்பட்டதோர் மழைச்சடங்கு தற்காலத்திலும் ஆப்பிரிக்க இனக்குழு மக்கள் இத்தகைய சடங்குகளை மழை வேண்டிச் செய்கின்றனர். மழை பெய்தால் தான் காட்டில் தாவரங்கள் வளரும், விலங்குகள் பெருகும் எனவே மழைச்சடங்குகள் நிகழ்த்தப்பட்டன”3 என எழுதுகிறார்.
இசையுலகில் மேகராகக் குறிஞ்சி (அமிர்தவர்சினி) முதலிய சில இராகங்களைப் பாடும் போது மழைவரும் என்பது அனுபவ வரலாறாக இன்றும் இருந்து வருகின்றது. கடந்த கி.பி.2000 முதல் 2004 ஆண்டுகளில் பருவமழை பொய்த்து தமிழகத்தில் பல்வேறு பட்டிணி நிகழ்வுகள் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே. ஆந்த காலக்கட்டங்களில் பல்வேறு திருக்கோயில்களில் மழை வேண்டி இசை முழக்கங்கள் மேற்கொள்ளப்பெற்றன. இன்றளவும் கிராமங்களில் மழை வேண்டி காமன் பண்டிகை கொண்டாடுவதும், கொண்டாட்டத்தின் போது இசைப் பாடல்களைப் பாடுவதும், பண்டிகை முடிவில் மன்மதனை தீயிடுவதும் வழக்கமாக உள்ளது. மேலும் திருக்கோயில் திருவிழாக் காலங்களில் மழை பெய்வதும் இயற்கையின் வியப்பாக உள்ளது.
இசையால் வசமாகா இதயம் இல்லை என்று சொல்வதைப்போல இசையால் இயற்கையும் வசமாகும் என்பது மேற்கண்ட செய்திகள் வழி புலனாகிறது. மேலும் இசைக்கும் மழைக்கும் இருந்த உறவினைக் காலந்தோறும் வழங்கிவரும் இலக்கியங்கள் வழி தமிழ் உலகிற்கு எடுத்துரைப்பதும், இயற்கையை பாதுகாப்பதற்கும் இனிய வாழ்க்கையை மானிட இனம் வாழ்வதற்கும் மழையே இன்றியமையாதது.
சான்றெண் விளக்கம் 1. அம்மன் தரிசனம், திங்கள் இதழ், ஜீலை 1993, மழைதரும் மோகினி, கட்டுரை ப.21 2. மேலது, ப.22 3. ஊரடவரசயட hநசவையபந ழக வாந வுயஅடைள ஐஐவுளுஇ ஆயனசயளஇ P.112-113
தமிழிசையில் உலக இசையின் கலப்பு
ஓர் இனக்குழு மொழி இல்லாமல் கூட இருக்கமுடியும். ஆனால் இசை இல்லாமல் இருப்பதற்கான காரணியைக் கூற முடியாது. இசை என்பதற்கு இசையியலாளர்கள் (ஆரளiஉழடழபளைவள) சொல்லும் விளக்கங்கள் பல இருப்பினும் சமூகவியலாளர்கள் இசையை ஒரு பண்பாட்டுக் கூற்றின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள். உணர்வுகளை வழிநடுத்தும் இசைக்கு மொழி தேவையில்லை என்ற கருத்து இருக்கிறது. இது உண்மையானாலும் உள்ளத்தை நெறிப்படுத்தும் இசைக்கு மொழி இன்றியமையாக் காரணமாகும். தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடுகளுள் ஒன்றாகத் திகழும் செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற இருகூறுகளையுடைய தமிழருடைய இசை மரபில் பிரதேசத்தவர் வருகை, பிறநாட்டவர் வருகையால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றங்களால் உலக இசை என்ற ஒரு புதுமை உண்டாயிற்று. மேலும் உலக இசை என்பது ஊடகத்துறைகளுள் ஒன்றான திரையிசையின் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.
உலக இசை
உலக இசை என்பது மேற்கிந்திய இசையல்லாத இசையைக் குறிப்பதாக அமைகிறது. குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டார் இசை (குழடமடழசந) இனக்குழு இசை (நுவாniஉ) ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளின் மண்ணின் இசையாகவும் கொள்ளப்பெறுகிறது. மேலும் நாட்டுப்புற இனக்குழு இசையோடு மேற்கிந்திய வெகுசன இசை வடிவங்கள் கலந்து ஒரு தனி இசை வடிவமாக அறியப்பெற்று வருகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அறிவியல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியின் காரணமாக ஒளிப்பதிவுத் துறை (சுநஉழசனiபெ வுநஉhழெபழடல) விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்புத்துறை ஆகியவற்றின் பயனாய் உலகக் கலைஞர்கள் இடையிலான தொடர்பும் கலந்துரையாடலும் ஏற்பட்டன. இதன் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கருத்துக்கள் செய்திகள் போன்றவை எளிதாக பரவின. மேலும் கலைஞர்கள் தங்களது கலை அனுபவத்தினை நாடுவிட்டு நாடு சென்று நிகழ்த்திக்காட்டிப் பெருமை பெற்றனர். புதிய இசை வடிவங்களுடன் சேர்க்கைகளும் சோதனை முயற்சிகளும், புதிய கலந்திசை வடிவங்களுக்கு வழிவகுத்தன. இவ்வகையில் 1980-களில் மேற்கிந்திய இசை உலகில் புதிய வகையிலான இசை வகைகள் தோன்றின. உலகில் தோன்றிய புதிய வகையான இசை வகைகள் “றுழசடன அரளiஉஇ றுழசடன டிநயவஇ றுழசடன கரளழைn என்பனவே. அவை வேறு சில பகுதிகளில் நவாழெ pழிஇ யுகசழ pழிஇ pழிஇ ககசழ டிநயவஇ எனவும், இதே இரு வகைகள் வேறு சில இடங்களில் வசiடியடஇ வநஉhழெ-வசiடியடஇ உலடிநச வசiடியடஇ வசயnஉநஇ நெற யபநஇ றழசடன யஅடிநைவெஇ நவாழெ கரளழைnஇ நவாழழெ வநஉhழெஇ நவாழெ – pரமெஇ நவாழெ வசiடியட” (காட்சிப்பிழை திரை ப-1) என்றும் வழங்கப்பெற்றன. 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்க இசைச் சந்தை பற்றி நியூஸ் வீக் இதழின் கட்டுரைப் பதிவொன்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையாக மேற்கிந்திய செவ்வியல் இசை குறிக்கப் பெற்றுள்ளது. 1980-களில் உலக இசைச் சந்தையில் நுழைந்த இவ்வகை இசை 1990-களின் ஆரம்பத்தில் மேற்கிந்திய செவ்வியல் (ஊடயளளiஉயட) ஜாஸ் (துயணண) இசைக்கு நிகரான விற்பனையை எட்டியுள்ளது. மேற்கிந்திய இசை என்பது ஒரு தனிப்பட்ட இசை வகை அல்ல பல்வேறு இசைக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்றே சொல்ல வேண்டியுள்ளது. மேற்கிந்திய வெகுசன இசையை, செவ்வியல் அல்லாத ஆங்கிலம் பேசாத நாடுகளின் இசைக் குறிப்பதாகவும் சொல்லலாம். இசைச் சந்தையைப் பொறுத்த அளவில் றுழசடன அரளiஉ என்பது நாடார் இசையை இட்டு நிரப்புவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய முழவழ இசை திபெத்திய மந்திரங்கள், பல்கேரியாவின் நாட்டார் இசை மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய தென் அமெரிக்கா நாடுகளின் நாட்டுப்புற பழங்குடியிசை ஆகியவற்றையும் இதில் அடக்கலாம்.
தமிழிசையில் உலக இசை கலத்தல்
கிழக்கிந்திய கம்பெனிகள் வருகையில் ஒரு சில மாற்றங்கள் தோன்றின. அன்றுவரை ஆங்கிலம் அறியாத இந்தியர்கள் ஆங்கில மொழி கற்க நேர்ந்தது. புதுமையை அனைவரும் விரும்பும் விதமாக ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும் நிலையும் அவற்றை வாயில் முணுமுணுக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இதுவே தொடர்ச்சியாகி காலப்போக்கில் 1980-களில் தோன்றிய புதிய இசை வகைகளுக்கு மூல காரணமாக இருந்தது அப்போதிருந்த உலகமயமாக்கல் சூழ்நிலைதான் என்று சொல்ல வேண்டும். 1980-களில் மேற்குச் சூழலில் உருவான இவ்விசையமைப்பு 1990-களில் தமிழ் சினிமா இசைக்குள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்தியப் பண்பாட்டில் கலப்பிசை தோன்றிடினும் மாறாதிருக்கும் ஒரே அம்சம் குரலிசை(ஏழஉயட ளுவலடந) மட்டுமே ஆகும். மேற்கிந்திய நாடுகளின் ஜாஸ், ராக் அன் ரோல், பாப் வகைகளின் தாக்கம் இருப்பினும் தமிழ்த் திரையிசையின் அடிப்படை அடையாளத்தினை முற்றிலுமாகத் தகர்த்துவிடவில்லை.“விஸ்வநாதன் வேலை வேண்டும் (படம்: காதலிக்க நேரமில்லை) எனும் பாடல் 70-களிலும், 80-களில் ரம்பம்பம் ஆரம்பம் (படம்: மைக்கேல் மதன காமராசன்) பாடல்களும் பிரபலமாக விளங்கியவை. இவ்விரு பாடல்களும் இரு வேறு காலகட்டங்களில் இரு வேறு இசை அமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டவை. ஆனால் அவற்றின் அடிப்படை மெட்டு ஏதோவொரு வகையில் தமிழ் அடையாளத்தோடு தொடர்புடையதாக இருந்தன. ஆனால் 90-களுக்குப் பிந்தைய சூழல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பெறப்பட்ட நாட்டார் மற்றும் செவ்விசை துணுக்குள்(ளுயஅpடநள) நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட இயற்கை ஒலிகள், தாளக் கோர்வைகள் ஆகியவை இசையமைப்பாளர்களுக்கு கணினித் தொழில் நுட்பத்தின் உதவியோடு கிடைக்கப்பெற்றன.” (காட்சிப்பிழைத் திரை ப-1) ஆதலால் அவற்றின் தாக்கம் புது வகையான இசையை உருவாக்கியது. இசையை ஒரு பண்பாட்டுக் கூறாக அடையாளப்படுத்தும் போது ஏறத்தாழ 4,634 சமூகங்கள் இந்தியாவில் இருப்பதாக இந்திய மானிடவியல் அளவை அமைப்பு (யுவொசழடிழைடழபiஉயட ளரசஎநல ழக ஐனெயை)கணக்கிட்டுள்ளது. இந்தியா போன்ற பண்டைத்துவம் கொண்ட பண்பாடுகள் உள்ள பல்வேறு மொழி, இனப் பாகுபாடுகள் கொண்ட மக்கள் கூட்டம் வாழும் ஒரு தேசத்தினை ஒரே விதமான இசையால் ஈர்த்துவிட முடியும் என்பது ஆய்வுக்குரியது. பொதுவாகவே உணவு, உடையைப் போல ஏனைய பண்பாட்டுக் கூறுகளிலும் தனித்துவமான கூறுகள் இருப்பது இயற்கை. ஆனால் புதுமையான ஒன்றினை வியப்புடன் காண்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பது உண்மை. அந்த வகையில் தமிழில் கலப்பிசை தோன்றிவிட்டது. இளையராசாவால் இசையமைக்கப்பெற்ற கிழக்கு வாசல் திரைப்படத்தின் ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’ என்ற பாடல் கிராமிய இசையை அடியொற்றி அமைக்கப்பெற்றிருக்கிறது. அதில் அடுத்ததாக வரும்(டீ பு ஆ) இடை இசையில் (சரணத்திற்கு முன்பகுதி) தென்னாப்பிரிக்கர்களின் நாட்டுப்புற இசைச் சாயலை அறிமுகம் செய்கிறார் இளையராசா. இன்றைய நவீன உலகில் கிராமப்புறங்களில் கூட திருத்தப்படாத புருவங்களைக் கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அதுபோல வெளிநாட்டு மோகத்தின் காரணமாக தலை கிராப்பும் ஆண்களிடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டு வருகிறது. அதுபோல புதுமையை விரும்பியதன் காரணமாக கலப்பிசை தோன்றியது.
கலப்பிசை
இந்நாளில் இசை உருவாக்கம் என்பது முழுக்க முழுக்க தொழில் நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. இசையமைப்பாளர் என்பவர் மெட்டுப்போடத்தெரிந்த ஒரு படைப்பாளியல்ல. 1980-களோடு அந்த முறை முடிவுக்கு வந்தது. இப்போது இசையமைப்பாளர்கள் என்பவர்கள் எலக்ட்ரானிக் கீ போர்டுகளைக் கணினியோடு இயக்கத் தெரிந்த ஒரு தொழில் நுட்ப வல்லுநராக இருக்க வேண்டும். இதில் ஒலிப்பொறியியல் (ளுழரனெ நுபெiநெநசiபெ) ஒரு இன்றியமையா நுட்பமாக உள்ளது. லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள கீபோர்டுகள் (முநலடிழயசனள) கணினிகளை(ஊழஅpரவநசள) ஒலிபெருக்கிகள் (ஆழnவைழசள), ஒலி வாங்கிகள் (ஆiஉசழிhழநௌ) இன்னபிற சாதனங்கள் இல்லாமல் மேடையில் தாளம் தட்டி வெறும் தோற்கருவிகள், துளைக்கருவிகள், தந்திக்கருவிகளை மட்டும் வைத்துக்கொண்டு இசையமைப்பது என்பது இயலாத செயலாகும்.
தமிழ் இசையில் உலக இசையின் தாக்கம் ஏற்பட்டதன் நோக்கமும் காரணமும்
மனித மனம் புதுமைக்கு என்று அடிமையாவது இயல்பு. அதோடு அந்தப்புதுமை அதீதமான விளம்பரங்களோடு வெளிப்படுத்தப்பெற்றால் புதுமையின் வளர்ச்சியை அளவிட முடியாது. அதுபோலதான் புதுமையின் காரணமாகத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒலிப்பதிவு என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக அதனை கொண்டு தொழில் நடத்தி இலாபம் சம்பாதிக்கும் கம்பெனிகள் உருவானது இன்றியமையாக் காரணமாகும். இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும் என்ற உண்மையை அறிந்தவர்கள் புதிய வியூகங்களை வகுத்தார்கள். இலண்டனில் மதுவிடுதி ஒன்றில் 1987-ஆம் ஆண்டு 23 பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இவர்கள் இசைவாணர்கள் அல்ல. முன்னனி ஒலி நாடகக் கம்பெனியாளர்கள், வளர்ந்து வரும் இசைச் சந்தையை விரிவுபடுத்துவது எப்படி என்று விவாதித்தனர். மேலும் ஒலிநாடாக்களை எப்படி வகைப்படுத்துவது என்றும் விவாதிக்கப்பெற்று இசைக்கலைஞர்கள் அல்லாத இசை வியாபாரிகள் சேர்ந்த உலக இசை (றுழசடன அரளiஉ) என்ற சொல்லினை உருவாக்கினார்கள். இந்த வகைப்பாடு இன்று உலகில் உள்ள அனைத்து இசைவாணர்கள் விமர்சகர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் அனைவராலும் பின்பற்றப்பெற்று வருகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் 1980-களுக்குப் பின் முதலாலியம், கலைகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், உறவுகள், அந்தரங்கங்கள், அதிசயங்கள் போன்ற அனைத்தினையும் பண்டமாக்கி விற்கத் தலைப்பட்டதன் விளைவே கலப்பிசை தோன்றியதற்கான காரணமாகும். இசை என்னும் கலையைச் சந்தைக்குக் கொண்டு வரவேண்டுமென்றால், பாரம்பரிய நாட்டார் கலைஞர்களைக் கண்டறிந்து ஒலிப்பதிவு செய்து ஒலி நாடாக்களாக ஒலிப்பேழைகளாக உருவாக்க வேண்டியது இன்றியமையாதது. மேலும் அவற்றினை விளம்பரப்படுத்துவது விற்பனை செய்வது ஆகியன தேவை. இப்பணியை இந்நிறுவனங்கள் செய்தன. ஓர் இசையைப் பதிவு செய்கிற போது தொழில் நுட்பம் சார்ந்த தேவை என்பது இன்றியமையாதது. அதோடு பதிவு செய்யப்பெற்ற இசை கேட்கப்படுதல், நேர்த்தி போன்ற செயல்களில் கவனம் தேவைப்படுகிறது. இவற்றினை மையமாகக் கொண்டு சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய இசைகள் தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. அவற்றுள் துடீடுஇ யுமுபுஇ முசுமுஇ ஊடீஐஇ ளுமுடீஇ ளுழலெஇ லுயஅயாயஇ முழசபஇ னுநழெnஇ ளுவநiடிநசபஇ குழளவநஒஇ வுயளஉயn ஆகிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா நாடுகளைச் சார்ந்த முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கின. இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குகின்ற போது அவற்றின் தேவையை மக்களிடம் குறிப்பாகக் கலைஞர்களிடம் கலப்பிசை கொண்டு சென்றது. 1980-க்குப் பிறகு செயற்கைக்கோள் அலைவரிசை, தொலைக்காட்சி சாதனங்கள், ஹாலிவுட் படங்கள் போன்றவை தமிழகத்தினை முற்றுகை இட்டன. ஆங்கிலப் படங்களின் நேரடி மொழிமாற்றம், ஒரு புதிய வகை இரசனையை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. புதுமையான கதையமைப்புகள், ஒப்பனைகள், ஒலி-ஒளி ஆகியவற்றில் இருக்கும் துல்லியத்தன்மை போன்றன மக்களை ஈர்த்ததுடன் மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பெற்றன. ஆர்வமூட்டும் சமகாலப்பிரச்சனை, போர், கலவரம், வன்முறை, புதிய காட்சிகள், பிரிவு, இழப்பு, காதல், இறப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய திரைப்படங்கள் பெருகின. இதனைக் கண்ட பார்வையாளர்கள் இத்தகைய படங்களையும், இசைக்கலையையும் வரவேற்றனர். கிழக்கிந்திய கம்பெனியார் எவ்வாறு வாணிபப் பொருட்டு இந்தியாவிற்குள் புகுந்தார்களே அதுபோல மேற்கிந்திய இசையானது வணிபத்தினை, வியாபாரச் சந்தையை மையமாகக் கொண்டே தமிழகத்தில் நுழைந்து இன்றளவும் நிலைத்து வருகின்றது.
ஊலக நாடுகளில் தமிழர் இசை
இந்தியர்கள் இசைக்கலையுடன் பூர்வீக எகிப்திய இசைக்கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலிருந்த யாழ் வகைகளைப் போலவே எகிப்து நாட்டிலும் நரம்பு வேறுபாடு உடைய யாழ்கள் இருந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் யாழ் வருணிக்கப்பட்டு இருப்பது போல எகிப்திய யாழ்களும், அழகிய வடிவம் உடையனவாக அமைக்கப்பட்டு சிவப்புத் தோல் உறையால் போர்த்தப்பெற்றிருந்தன. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் “தீப்ஸ்” (வுhநடிநள) என்ற எகிப்திய நகரத்தில் இருந்த மகான்களின் கல்லறைகளில் யாழ் போன்ற இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பெற்றன. இவ்விசைக் கருவிகள் பெரும்பாலும் ஏழு நரம்புகளை உடையனவாக இருந்தன. 21 நரம்புகளை உடைய ஓர் எகிப்திய யாழ் பிரான்ஸ் (குசயnஉந) தேசத்துத் தலைநகரான“பாரீஸ்” (Pயசளை) நகரில் உள்ள பொருட்காட்சியில் வைக்கப்பெற்றுள்ளது. தீப்ஸ் மன்னர்களின் கல்லறைகளின் சுவர்களில் ஆண்களும் பெண்களும் யாழை மீட்டி வாசிக்கும் பாவணையால் தீட்டம்பெற்ற பல படங்கள் காணப்பெறுகின்றன. யாழ் வாசிக்கும் ஒருவன் சிகப்புக் கறையுடைய ஓர் ஆடையை உடுத்தியிருப்பதாகப் படம் வரையப்பெற்றுள்ளது. அப்படி வண்ணம் தேய்க்கும் கலை தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் தான் இருந்தது என்பது வரலாற்று உண்மை. மேற்கூறிய படங்களில் யாழைத் தவிர முழவு, குழல், கஞ்சதாளம் முதலிய இசைக்கருவிகளும் வரையப்பெற்றுள்ளன. கம்போடியா, சம்பா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜாவா, பர்மா, இந்தோனேசியா, ஆஸ்திரியா, கிழக்கு ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு அங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஐரோப்பா தன்னுடைய இசையின் அடித்தளத்திற்கு இந்தியாவிற்குக் கடமைப்பட்டுள்ளது ச ரி க ம ப த நி என்ற ஸ்வரப் பெயர்கள், நம் நாட்டு இசைக்குறியீடுகள் ஆகியவை பெர்ஷியா (Pநசளயை) அரேபியா(யுசயடியை) வழியாக ஐரோப்பாவிற்குச் சென்று பதினொன்றாவது நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த குய்டோடி-அரெஜ்ஜோ என்பவரால் அங்கு புகுத்தப்பெற்றது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் நம் தமிழர் இசையினுடைய எச்சம் இன்றளவும் இருந்து வருகின்றது. கழவெ-� ச ட : சு ர்�சு ம்மன் தரிசனம், திங்கள் இதழ், ஜீலை 1993, மழைதரும் மோகினி, கட்டுரை ப.21
2. மேலது, ப.22 3. ஊரடவரசயட hநசவையபந ழக வாந வுயஅடைள ஐஐவுளுஇ ஆயனசயளஇ P.112-113
ஓர் இனக்குழு மொழி இல்லாமல் கூட இருக்கமுடியும். ஆனால் இசை இல்லாமல் இருப்பதற்கான காரணியைக் கூற முடியாது. இசை என்பதற்கு இசையியலாளர்கள் (ஆரளiஉழடழபளைவள) சொல்லும் விளக்கங்கள் பல இருப்பினும் சமூகவியலாளர்கள் இசையை ஒரு பண்பாட்டுக் கூற்றின் வெளிப்பாடாகக் காண்கிறார்கள். உணர்வுகளை வழிநடுத்தும் இசைக்கு மொழி தேவையில்லை என்ற கருத்து இருக்கிறது. இது உண்மையானாலும் உள்ளத்தை நெறிப்படுத்தும் இசைக்கு மொழி இன்றியமையாக் காரணமாகும். தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடுகளுள் ஒன்றாகத் திகழும் செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற இருகூறுகளையுடைய தமிழருடைய இசை மரபில் பிரதேசத்தவர் வருகை, பிறநாட்டவர் வருகையால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அம்மாற்றங்களால் உலக இசை என்ற ஒரு புதுமை உண்டாயிற்று. மேலும் உலக இசை என்பது ஊடகத்துறைகளுள் ஒன்றான திரையிசையின் மூலமாக மக்களைச் சென்றடைந்தது.
உலக இசை (றுழசடன ஆரளiஉ) உலக இசை என்பது மேற்கிந்திய இசையல்லாத இசையைக் குறிப்பதாக அமைகிறது. குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டார் இசை (குழடமடழசந) இனக்குழு இசை (நுவாniஉ) ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளின் மண்ணின் இசையாகவும் கொள்ளப்பெறுகிறது. மேலும் நாட்டுப்புற இனக்குழு இசையோடு மேற்கிந்திய வெகுசன இசை வடிவங்கள் கலந்து ஒரு தனி இசை வடிவமாக அறியப்பெற்று வருகிறது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அறிவியல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சியின் காரணமாக ஒளிப்பதிவுத் துறை (சுநஉழசனiபெ வுநஉhழெபழடல) விமானப் போக்குவரத்து, தகவல் தொடர்புத்துறை ஆகியவற்றின் பயனாய் உலகக் கலைஞர்கள் இடையிலான தொடர்பும் கலந்துரையாடலும் ஏற்பட்டன. இதன் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கருத்துக்கள் செய்திகள் போன்றவை எளிதாக பரவின. மேலும் கலைஞர்கள் தங்களது கலை அனுபவத்தினை நாடுவிட்டு நாடு சென்று நிகழ்த்திக்காட்டிப் பெருமை பெற்றனர். புதிய இசை வடிவங்களுடன் சேர்க்கைகளும் சோதனை முயற்சிகளும், புதிய கலந்திசை வடிவங்களுக்கு வழிவகுத்தன. இவ்வகையில் 1980-களில் மேற்கிந்திய இசை உலகில் புதிய வகையிலான இசை வகைகள் தோன்றின. உலகில் தோன்றிய புதிய வகையான இசை வகைகள் “றுழசடன அரளiஉஇ றுழசடன டிநயவஇ றுழசடன கரளழைn என்பனவே. அவை வேறு சில பகுதிகளில் நவாழெ pழிஇ யுகசழ pழிஇ pழிஇ ககசழ டிநயவஇ எனவும், இதே இரு வகைகள் வேறு சில இடங்களில் வசiடியடஇ வநஉhழெ-வசiடியடஇ உலடிநச வசiடியடஇ வசயnஉநஇ நெற யபநஇ றழசடன யஅடிநைவெஇ நவாழெ கரளழைnஇ நவாழழெ வநஉhழெஇ நவாழெ – pரமெஇ நவாழெ வசiடியட” (காட்சிப்பிழை திரை ப-1) என்றும் வழங்கப்பெற்றன. 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்க இசைச் சந்தை பற்றி நியூஸ் வீக் இதழின் கட்டுரைப் பதிவொன்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையாக மேற்கிந்திய செவ்வியல் இசை குறிக்கப் பெற்றுள்ளது. 1980-களில் உலக இசைச் சந்தையில் நுழைந்த இவ்வகை இசை 1990-களின் ஆரம்பத்தில் மேற்கிந்திய செவ்வியல் (ஊடயளளiஉயட) ஜாஸ் (துயணண) இசைக்கு நிகரான விற்பனையை எட்டியுள்ளது. மேற்கிந்திய இசை என்பது ஒரு தனிப்பட்ட இசை வகை அல்ல பல்வேறு இசைக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்றே சொல்ல வேண்டியுள்ளது. மேற்கிந்திய வெகுசன இசையை, செவ்வியல் அல்லாத ஆங்கிலம் பேசாத நாடுகளின் இசைக் குறிப்பதாகவும் சொல்லலாம். இசைச் சந்தையைப் பொறுத்த அளவில் றுழசடன அரளiஉ என்பது நாடார் இசையை இட்டு நிரப்புவதாக அமைந்துள்ளது. ஜப்பானிய முழவழ இசை திபெத்திய மந்திரங்கள், பல்கேரியாவின் நாட்டார் இசை மத்திய கிழக்கு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய தென் அமெரிக்கா நாடுகளின் நாட்டுப்புற பழங்குடியிசை ஆகியவற்றையும் இதில் அடக்கலாம்.
தமிழிசையில் உலக இசை கலத்தல் கிழக்கிந்திய கம்பெனிகள் வருகையில் ஒரு சில மாற்றங்கள் தோன்றின. அன்றுவரை ஆங்கிலம் அறியாத இந்தியர்கள் ஆங்கில மொழி கற்க நேர்ந்தது. புதுமையை அனைவரும் விரும்பும் விதமாக ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும் நிலையும் அவற்றை வாயில் முணுமுணுக்கும் பழக்கமும் ஏற்பட்டது. இதுவே தொடர்ச்சியாகி காலப்போக்கில் 1980-களில் தோன்றிய புதிய இசை வகைகளுக்கு மூல காரணமாக இருந்தது அப்போதிருந்த உலகமயமாக்கல் சூழ்நிலைதான் என்று சொல்ல வேண்டும். 1980-களில் மேற்குச் சூழலில் உருவான இவ்விசையமைப்பு 1990-களில் தமிழ் சினிமா இசைக்குள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்தியப் பண்பாட்டில் கலப்பிசை தோன்றிடினும் மாறாதிருக்கும் ஒரே அம்சம் குரலிசை(ஏழஉயட ளுவலடந) மட்டுமே ஆகும். மேற்கிந்திய நாடுகளின் ஜாஸ், ராக் அன் ரோல், பாப் வகைகளின் தாக்கம் இருப்பினும் தமிழ்த் திரையிசையின் அடிப்படை அடையாளத்தினை முற்றிலுமாகத் தகர்த்துவிடவில்லை.“விஸ்வநாதன் வேலை வேண்டும் (படம்: காதலிக்க நேரமில்லை) எனும் பாடல் 70-களிலும், 80-களில் ரம்பம்பம் ஆரம்பம் (படம்: மைக்கேல் மதன காமராசன்) பாடல்களும் பிரபலமாக விளங்கியவை. இவ்விரு பாடல்களும் இரு வேறு காலகட்டங்களில் இரு வேறு இசை அமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டவை. ஆனால் அவற்றின் அடிப்படை மெட்டு ஏதோவொரு வகையில் தமிழ் அடையாளத்தோடு தொடர்புடையதாக இருந்தன. ஆனால் 90-களுக்குப் பிந்தைய சூழல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பெறப்பட்ட நாட்டார் மற்றும் செவ்விசை துணுக்குள்(ளுயஅpடநள) நேரடியாகப் பதிவு செய்யப்பட்ட இயற்கை ஒலிகள், தாளக் கோர்வைகள் ஆகியவை இசையமைப்பாளர்களுக்கு கணினித் தொழில் நுட்பத்தின் உதவியோடு கிடைக்கப்பெற்றன.” (காட்சிப்பிழைத் திரை ப-1) ஆதலால் அவற்றின் தாக்கம் புது வகையான இசையை உருவாக்கியது. இசையை ஒரு பண்பாட்டுக் கூறாக அடையாளப்படுத்தும் போது ஏறத்தாழ 4,634 சமூகங்கள் இந்தியாவில் இருப்பதாக இந்திய மானிடவியல் அளவை அமைப்பு (யுவொசழடிழைடழபiஉயட ளரசஎநல ழக ஐனெயை)கணக்கிட்டுள்ளது. இந்தியா போன்ற பண்டைத்துவம் கொண்ட பண்பாடுகள் உள்ள பல்வேறு மொழி, இனப் பாகுபாடுகள் கொண்ட மக்கள் கூட்டம் வாழும் ஒரு தேசத்தினை ஒரே விதமான இசையால் ஈர்த்துவிட முடியும் என்பது ஆய்வுக்குரியது. பொதுவாகவே உணவு, உடையைப் போல ஏனைய பண்பாட்டுக் கூறுகளிலும் தனித்துவமான கூறுகள் இருப்பது இயற்கை. ஆனால் புதுமையான ஒன்றினை வியப்புடன் காண்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள் என்பது உண்மை. அந்த வகையில் தமிழில் கலப்பிசை தோன்றிவிட்டது. இளையராசாவால் இசையமைக்கப்பெற்ற கிழக்கு வாசல் திரைப்படத்தின் ‘வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’ என்ற பாடல் கிராமிய இசையை அடியொற்றி அமைக்கப்பெற்றிருக்கிறது. அதில் அடுத்ததாக வரும்(டீ பு ஆ) இடை இசையில் (சரணத்திற்கு முன்பகுதி) தென்னாப்பிரிக்கர்களின் நாட்டுப்புற இசைச் சாயலை அறிமுகம் செய்கிறார் இளையராசா. இன்றைய நவீன உலகில் கிராமப்புறங்களில் கூட திருத்தப்படாத புருவங்களைக் கொண்ட பெண்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அதுபோல வெளிநாட்டு மோகத்தின் காரணமாக தலை கிராப்பும் ஆண்களிடம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டு வருகிறது. அதுபோல புதுமையை விரும்பியதன் காரணமாக கலப்பிசை தோன்றியது.
கலப்பிசை இந்நாளில் இசை உருவாக்கம் என்பது முழுக்க முழுக்க தொழில் நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. இசையமைப்பாளர் என்பவர் மெட்டுப்போடத்தெரிந்த ஒரு படைப்பாளியல்ல. 1980-களோடு அந்த முறை முடிவுக்கு வந்தது. இப்போது இசையமைப்பாளர்கள் என்பவர்கள் எலக்ட்ரானிக் கீ போர்டுகளைக் கணினியோடு இயக்கத் தெரிந்த ஒரு தொழில் நுட்ப வல்லுநராக இருக்க வேண்டும். இதில் ஒலிப்பொறியியல் (ளுழரனெ நுபெiநெநசiபெ) ஒரு இன்றியமையா நுட்பமாக உள்ளது. லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள கீபோர்டுகள் (முநலடிழயசனள) கணினிகளை(ஊழஅpரவநசள) ஒலிபெருக்கிகள் (ஆழnவைழசள), ஒலி வாங்கிகள் (ஆiஉசழிhழநௌ) இன்னபிற சாதனங்கள் இல்லாமல் மேடையில் தாளம் தட்டி வெறும் தோற்கருவிகள், துளைக்கருவிகள், தந்திக்கருவிகளை மட்டும் வைத்துக்கொண்டு இசையமைப்பது என்பது இயலாத செயலாகும். தமிழ் இசையில் உலக இசையின் தாக்கம் ஏற்பட்டதன் நோக்கமும் காரணமும் மனித மனம் புதுமைக்கு என்று அடிமையாவது இயல்பு. அதோடு அந்தப்புதுமை அதீதமான விளம்பரங்களோடு வெளிப்படுத்தப்பெற்றால் புதுமையின் வளர்ச்சியை அளவிட முடியாது. அதுபோலதான் புதுமையின் காரணமாகத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒலிப்பதிவு என்ற முறை கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக அதனை கொண்டு தொழில் நடத்தி இலாபம் சம்பாதிக்கும் கம்பெனிகள் உருவானது இன்றியமையாக் காரணமாகும். இசைக்கு எல்லா உயிர்களும் மயங்கும் என்ற உண்மையை அறிந்தவர்கள் புதிய வியூகங்களை வகுத்தார்கள். இலண்டனில் மதுவிடுதி ஒன்றில் 1987-ஆம் ஆண்டு 23 பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இவர்கள் இசைவாணர்கள் அல்ல. முன்னனி ஒலி நாடகக் கம்பெனியாளர்கள், வளர்ந்து வரும் இசைச் சந்தையை விரிவுபடுத்துவது எப்படி என்று விவாதித்தனர். மேலும் ஒலிநாடாக்களை எப்படி வகைப்படுத்துவது என்றும் விவாதிக்கப்பெற்று இசைக்கலைஞர்கள் அல்லாத இசை வியாபாரிகள் சேர்ந்த உலக இசை (றுழசடன அரளiஉ) என்ற சொல்லினை உருவாக்கினார்கள். இந்த வகைப்பாடு இன்று உலகில் உள்ள அனைத்து இசைவாணர்கள் விமர்சகர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் அனைவராலும் பின்பற்றப்பெற்று வருகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் 1980-களுக்குப் பின் முதலாலியம், கலைகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், உறவுகள், அந்தரங்கங்கள், அதிசயங்கள் போன்ற அனைத்தினையும் பண்டமாக்கி விற்கத் தலைப்பட்டதன் விளைவே கலப்பிசை தோன்றியதற்கான காரணமாகும். இசை என்னும் கலையைச் சந்தைக்குக் கொண்டு வரவேண்டுமென்றால், பாரம்பரிய நாட்டார் கலைஞர்களைக் கண்டறிந்து ஒலிப்பதிவு செய்து ஒலி நாடாக்களாக ஒலிப்பேழைகளாக உருவாக்க வேண்டியது இன்றியமையாதது. மேலும் அவற்றினை விளம்பரப்படுத்துவது விற்பனை செய்வது ஆகியன தேவை. இப்பணியை இந்நிறுவனங்கள் செய்தன. ஓர் இசையைப் பதிவு செய்கிற போது தொழில் நுட்பம் சார்ந்த தேவை என்பது இன்றியமையாதது. அதோடு பதிவு செய்யப்பெற்ற இசை கேட்கப்படுதல், நேர்த்தி போன்ற செயல்களில் கவனம் தேவைப்படுகிறது. இவற்றினை மையமாகக் கொண்டு சுமார் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிய இசைகள் தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. அவற்றுள் துடீடுஇ யுமுபுஇ முசுமுஇ ஊடீஐஇ ளுமுடீஇ ளுழலெஇ லுயஅயாயஇ முழசபஇ னுநழெnஇ ளுவநiடிநசபஇ குழளவநஒஇ வுயளஉயn ஆகிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா நாடுகளைச் சார்ந்த முன்னனி நிறுவனங்கள் களத்தில் இறங்கின. இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குகின்ற போது அவற்றின் தேவையை மக்களிடம் குறிப்பாகக் கலைஞர்களிடம் கலப்பிசை கொண்டு சென்றது. 1980-க்குப் பிறகு செயற்கைக்கோள் அலைவரிசை, தொலைக்காட்சி சாதனங்கள், ஹாலிவுட் படங்கள் போன்றவை தமிழகத்தினை முற்றுகை இட்டன. ஆங்கிலப் படங்களின் நேரடி மொழிமாற்றம், ஒரு புதிய வகை இரசனையை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. புதுமையான கதையமைப்புகள், ஒப்பனைகள், ஒலி-ஒளி ஆகியவற்றில் இருக்கும் துல்லியத்தன்மை போன்றன மக்களை ஈர்த்ததுடன் மக்கள் மனதில் நிலையான இடத்தினைப் பெற்றன. ஆர்வமூட்டும் சமகாலப்பிரச்சனை, போர், கலவரம், வன்முறை, புதிய காட்சிகள், பிரிவு, இழப்பு, காதல், இறப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய திரைப்படங்கள் பெருகின. இதனைக் கண்ட பார்வையாளர்கள் இத்தகைய படங்களையும், இசைக்கலையையும் வரவேற்றனர். கிழக்கிந்திய கம்பெனியார் எவ்வாறு வாணிபப் பொருட்டு இந்தியாவிற்குள் புகுந்தார்களே அதுபோல மேற்கிந்திய இசையானது வணிபத்தினை, வியாபாரச் சந்தையை மையமாகக் கொண்டே தமிழகத்தில் நுழைந்து இன்றளவும் நிலைத்து வருகின்றது.
ஊலக நாடுகளில் தமிழர் இசை இந்தியர்கள் இசைக்கலையுடன் பூர்வீக எகிப்திய இசைக்கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலிருந்த யாழ் வகைகளைப் போலவே எகிப்து நாட்டிலும் நரம்பு வேறுபாடு உடைய யாழ்கள் இருந்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் யாழ் வருணிக்கப்பட்டு இருப்பது போல எகிப்திய யாழ்களும், அழகிய வடிவம் உடையனவாக அமைக்கப்பட்டு சிவப்புத் தோல் உறையால் போர்த்தப்பெற்றிருந்தன. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் “தீப்ஸ்” (வுhநடிநள) என்ற எகிப்திய நகரத்தில் இருந்த மகான்களின் கல்லறைகளில் யாழ் போன்ற இசைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பெற்றன. இவ்விசைக் கருவிகள் பெரும்பாலும் ஏழு நரம்புகளை உடையனவாக இருந்தன. 21 நரம்புகளை உடைய ஓர் எகிப்திய யாழ் பிரான்ஸ் (குசயnஉந) தேசத்துத் தலைநகரான“பாரீஸ்” (Pயசளை) நகரில் உள்ள பொருட்காட்சியில் வைக்கப்பெற்றுள்ளது. தீப்ஸ் மன்னர்களின் கல்லறைகளின் சுவர்களில் ஆண்களும் பெண்களும் யாழை மீட்டி வாசிக்கும் பாவணையால் தீட்டம்பெற்ற பல படங்கள் காணப்பெறுகின்றன. யாழ் வாசிக்கும் ஒருவன் சிகப்புக் கறையுடைய ஓர் ஆடையை உடுத்தியிருப்பதாகப் படம் வரையப்பெற்றுள்ளது. அப்படி வண்ணம் தேய்க்கும் கலை தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் தான் இருந்தது என்பது வரலாற்று உண்மை. மேற்கூறிய படங்களில் யாழைத் தவிர முழவு, குழல், கஞ்சதாளம் முதலிய இசைக்கருவிகளும் வரையப்பெற்றுள்ளன. கம்போடியா, சம்பா, பிலிப்பைன்ஸ், சீனா, ஜாவா, பர்மா, இந்தோனேசியா, ஆஸ்திரியா, கிழக்கு ஐரோப்பா, ஜப்பான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு அங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஐரோப்பா தன்னுடைய இசையின் அடித்தளத்திற்கு இந்தியாவிற்குக் கடமைப்பட்டுள்ளது ச ரி க ம ப த நி என்ற ஸ்வரப் பெயர்கள், நம் நாட்டு இசைக்குறியீடுகள் ஆகியவை பெர்ஷியா (Pநசளயை) அரேபியா(யுசயடியை) வழியாக ஐரோப்பாவிற்குச் சென்று பதினொன்றாவது நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த குய்டோடி-அரெஜ்ஜோ என்பவரால் அங்கு புகுத்தப்பெற்றது. இவ்வாறு உலகின் பல நாடுகளிலும் நம் தமிழர் இசையினுடைய எச்சம் இன்றளவும் இருந்து வருகின்றது. கழவெ-� ச ட : சு ர்�சு ம்மன் தரிசனம், திங்கள் இதழ், ஜீலை 1993, மழைதரும் மோகினி, கட்டுரை ப.21
2. மேலது, ப.22 3. ஊரடவரசயட hநசவையபந ழக வாந வுயஅடைள ஐஐவுளுஇ ஆயனசயளஇ P.112-113