கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா (இறப்பு: 1989) முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்

இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரில் நடுத்தர வகுப்புத் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொட்டடியில் வளர்ந்தார்.

இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர்.

1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்[3]. இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:யாழ்ப்பாணம்&oldid=1654360" இலிருந்து மீள்விக்கப்பட்டது