பெயர்: ரெபேக்கா

NAME: RETHINAM REBECCA

பள்ளி: சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி

School: Chua Chu Kang Secondary School

சென்டோபா

சென்டோபாவின் வரலாறு

சிங்கப்பூரில், சென்டோபா என்னும் போர் நினைவிடம் எஸ்பிளனேடில் உள்ள கொண்ணாட் டிரைவில் அமைந்துள்ளது. இது முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த 124 வீரர்களின் தியாகத்தை நினைவுப்படுத்தும் ஓர் போர் நினைவாலயமாகும். இதைக் கட்டட வடிவமைப்பாளர்  ‘டெனிஸ் சான்ரி’ 15 நவம்பர் 1920ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 31 மார்ச் 1922ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். லண்டனில் உள்ள வொயிட்ஹாலை முன்மாதிரியாக வைத்துதான் சென்டோபா வடிவமைக்கப்பட்டது. பிறகு சென்டோபா, வேல்ஸ் இளவரசரால் மனப்பூர்வமான சமயச்சடங்கில் 31 மார்ச் 1922 இல் திறந்துவைக்கப்பட்டது. 1950இல், அரசாங்கம் இரண்டாம் உலகப் போரில் இறந்த வீர்ர்களின் நினைவாக கட்டமைப்பின் அடிப்பாகத்தை 1951இல் நீட்டித்தது.

சென்டோபாவின் வடிவமைப்பு
கிரானைடால் செய்யப்பட்ட இந்தக் கட்டடம் கிட்டத்தட்ட 60 அடி உயரம் கொண்டது. சென்டோபாவின் மீது வெண்கல வில்லைகள் உள்ளன. அந்த வெண்கல வில்லைகளில், போரில் இறந்த வீர்ர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. 
இந்த நினைவுச்சின்னதிற்கு வழிவகுக்கும் ஐந்து படிகள், போர்க்கால வருடங்கள் 1914-1918 மற்றும் வருடங்கள் 1939-1943 ஆகியவற்றைக் குறிக்கும். இது பார்ப்பதற்குக் கல்சவப்பெட்டியில் வெண்கல சிங்கத்தின் தலைப்போல் கைப்பிடிகள் உள்ளதாகவும், வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒருவர் வெற்றியோடு லாரெல் மாலையையும் ஒரு கிரீடத்தையும் அணிந்திருப்பது போலும் தெரியும். இது ஒரு சுத்தியல் மற்றும் ஒரு உளி கொண்டு செய்யப்பட்ட ஓர் எளிய கிரானைட் கட்டமைப்பாகும். 
சென்டோபாவின் முக்கியத்துவம்
28 டிசம்பர் 2010 அன்று, சென்டோபா  ஒரு தேசிய நினைவுச்சின்னமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தது.
23 ஏப்ரல் 2013 அன்று, சென்டோபா சூறையாடப்பட்டது. அதில் யாரோ "ஜனநாயகம்” என்ற சொல்லை ஆங்கிலத்திலும் அத்துடன் "1914-1915" என்ற எண்ணில் கோடு ஒன்றும் கிழித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 29 அன்று சிங்கப்பூரர் ஒருவர் சென்டோபா போர் நினைவில் அவ்வாறு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 3 மாத சிறை தண்டனையும், 3 பிரம்படிகளும், அத்துடன் சென்டோபாவை சரிசெய்யும் செலவாக $208 நஷ்டஈடும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.   
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரெபேக்கா&oldid=2251190" இலிருந்து மீள்விக்கப்பட்டது