லோகேஸ்வரன்
Joined 25 ஆகத்து 2016
செவரகோட்டை
செல்வரசன்கோட்டை எனும் பழைமையான பெயர் தற்பொழுது செவரகோட்டை என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இது சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இவ்வூரின் கிழக்கே காரைக்குடி முதல் தேவகோட்டை பகுதியும் தெற்கே தேவகோட்டை முதல் சிவகங்கை பகுதியும் மேற்கே சிவகங்கை முதல் திருக்கோஷ்டியூர் பகுதியும் வடக்கே திருக்கோஷ்டியூர் முதல் காரைக்குடி பகுதியும் எல்லைப் பரப்புகளாக உள்ளன. இவ்வூரில் பலவகைப்பட்ட குடிமக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது இவ்வூரின் சிறப்பாகும். இவ்வூர் பல பெருமைகளைக் கொண்டுள்ளது.
- பட்டமரம் தளிர்க்கச் செய்த தைனீஸ் மாதா கோயில். செவரகோட்டையின் சுற்று வட்டார மக்கள் பலரும் இக்கோயிலுக்கு வருகை புரிந்து நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபடுவது வழக்கம்.
- திரு வில்லுகாபுலி கருப்பர் கோயில். சித்ரா பௌர்ணமி அன்றி இக்கருப்பனசாமிக்குத் திருவிழாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. புகழ்சிறப்பு மிக்க இக்கருப்பர் திருவிழாவைப் பல ஊர் மக்கள் கண்டு வழிபடுவது வழக்கம்.
- ஊர்க்காவலன் கோயில், பெரியநாச்சியம்மன், ஊமநாச்சியம்மன், பொட்டல்காளியம்மன், உஜ்ஜையினி மகா காளியம்மன், அந்தரநாச்சியம்மன், மந்தமடையனாச்சியம்மன் போன்ற பல சிறு தெய்வங்கள் உண்டு.
- வரலாற்றுச் சிறப்புமிக்க திரு ஜெகதீஸ்வரர் திருக்கோயிலும் உண்டு.
- பெருமைகள்