நான் ஒரு மதுரைவாசி. ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளேன். ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். தற்சமயம் இல்லத்தரசியாக மட்டும் உள்ளேன். பிள்ளைகள் கல்லுாரியில் பயில்கிறார்கள். கணவர் அரசுப் பொறியாளர். ஏதாவது தமிழில் எழுதவேண்டும் என்ற அவாவினால் தமிழ் விக்கியில் நுழைந்துள்ளேன். கணினிப்பயன்பாடு பற்றிய அறிவு குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்தவும் இதை ஒரு வாய்ப்பாகக் கருதிகிறேன். என்னால் முடிந்த பங்களிப்பை தினமும் தமிழ் விக்கிக்குத்தர முடிவெடுத்துள்ளேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:விஜி&oldid=1514325" இலிருந்து மீள்விக்கப்பட்டது