பெயர்:

ஹரி கிருஷ்ணன்.


வாசம்:

பெங்களூரு, இந்தியா.


ஒரு சில குறிப்பிடத் தக்க பணிகள்:


கடந்த நாற்பதாண்டுகளாகத் தமிழில் மரபுக் கவிதைகள் இயற்றியும் பல கவியரங்குகளில் பங்கேற்றும் வந்துள்ளேன்,


1999 முதல் இணையத்தில் எழுதத் தொடங்கி, இதுவரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 2500 கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தும் 'சங்க காலம் முதல் எங்க காலம் வரையிலான' தமிழிலக்கியத்தின் அடிப்படையிலானவை, வள்ளுவர், கம்பர், பாரதி மூவரும் என் அடித்தளங்கள். ஆங்கிலத்தில் சென்னைஆன்லைன் என்ற வலைப் பத்திரிகையில் கம்ப-வால்மீகி இராமாயணங்களின் அடிப்படையில் பாத்திரப் படைப்பு ஆய்வுகளைச் சுமார் ஐந்தாண்டுகளுக்கு (1200+) அன்றாடக் கட்டுரைகளாக எழுதி வந்துள்ளேன். பல மடற்குழுக்களில் பங்கேற்று என் பங்களிப்பைச் செய்துள்ளேன்.


அனுமன்: வார்ப்பும் வனப்பும் என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் என்னுடைய கம்ப ராமாயண பாத்திரப் படைப்பு ஆய்வு வரிசையின் முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் 15 பாத்திரங்களை ஆய்ந்து எழுதத் திட்டமிருக்கிறது.


வெண்பா எழுதுவது பற்றி நான் நடத்தி வந்த பயிற்சி வகுப்புகளையும், விளக்கங்களையும் தமிழ் இணைய உலகம் நன்கறியும்.


அண்மையில் வெளிவந்த பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தில் (தமிழ் வடிவம் - ஆனந்த விகடன் வெளியீடு) துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஹரி_கிருஷ்ணன்&oldid=144650" இலிருந்து மீள்விக்கப்பட்டது