பண்டைய தமிழர்களின் உணவு  முறைகள்


முன்னுரை:-


“மருந்தென வேண்டாவாம் _யாக்கைக்க அருந்தியது அற்றது போற்றி உணின்”( குறள் 9.40) என்றார் திருவள்ளுவர்

பண்டைய தமிழ் மக்கள் உணவு முறைகளில் சிறந்து விளங்கினர். இதனைப் பற்றி விரிவாக காண்போம்

பண்டைய மக்களின் உணவு முறை: 

பண்டைய தமிழ் மக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலப்பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை நிலங்களில் விளைவித்து உண்டனர். அவை பல வகைகள், காய்கள் மற்றும் விலங்கினங்கள், பறவைகள், பூச்சிகள்,மாமிசங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொண்டனர். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றையும் நோய் தீர்க்கும் (உணவாக) மருந்தாவும் பயன்படுத்தினர். அவர்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை உண்டனர். பழங்களில் கொய்யா, இலந்தை, நாவல்,பப்பாளி, நெல்லி, வாழை பழங்கள் ஆகியவற்றையும் உணவாக எடுத்துக் கொண்டார்கள். சிறு தானியங்களான ராகி,தினை, வரகு, கம்பு, சோளம், மக்காசோளம், மூங்கில் அரிசி, சீரகசம்பா, பச்சரிசி,கருப்பு கவுனி அரிசி, சிவப்பு கேரளா அரிசி, கைகுத்தல் ஐஆறு அறுபது இது போன்ற எண்ணற்ற நெல்வகைகளை பயன்படுத்தினர்.

இவற்றில் கால்சியம் சத்து, இரும்புச்சத்து, புரதம்,நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளது.


அரிசிகளின் வகைகள் மற்றுப் பயன்கள்:

திணை :

புரதம், நார்ச்சத்து வைட்டமின் ஏ, மாவுச்சத்து, சுண்ணாம்பு மீத்து போன்றவை அதிக அளவில் உள்ளது.

கேழ்வரகு:


குடற்புண்களை குணமாக்கும் கால்சியம் குறைபாடு நிறைந்துள்ள பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

சாமை:

நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. இது ரத்த சோகையை நீக்க உதவும், மலச்சிக்கலைப் போக்கும். வயிறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் சாமையில உள்ள தாது உப்புகள் உயிரணுக்களை அதகரிக்கச் செய்யும்.

நம் முன்னோர்கள் அவர்கள் வாழும் இடத்திற்கேற்ப உணவுகள் மருபட்டன நாம் உண்ணும் போது நாம் உள்ளங்கையில் ஓட்டமல் சாப்பிடவேண்டும் என்று கூறியிருந்தனர்.

கம்பு தயிர் சாதம், சோழ ரவை கொழுக்கட்டை, கடல் பாசி பானகம், ராகி இட்லி, கம்பு தோசை, திணை எல் சாதம், கம்பு குழிபணியாரம் கொள்ளு ரசம்,சாமை பொங்கல் குதிரைவாழி கேப்பைக் கூழ் ஆகியவற்றை உண்டனர்.

“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்.” என்னும் வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப உணவுகளை உண்டு வையகம் பேற்ற வாழ்வங்கு வாழ்வோம்-

 “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
               
       வாழ்க வளமுடன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2240565Prathipa.R&oldid=3531917" இலிருந்து மீள்விக்கப்பட்டது