2409:4072:8E87:82D6:0:0:ED49:6006
🌺தாளிக்கால் கிராமம்🌺 இது காஞ்சி நாடு தொண்டை மண்டலம் கடிகாஷல ஷேத்திரத்தின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.அதாவது இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் அரக்கோணம் செல்லும் வழியில் தாளிக்கால் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கிராமம் ஆகும்.
🌸கோயில்கள்🌸 தாளிக்கால் கிராமத்தில் மிகவும் பழமையான தாளீஷ்வரர் ஆலயம் உள்ளது.மேலும் 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.வருடா வருடம் சித்திரை மாதம் திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா மிக விமர்சையாக பதினைந்து நாட்கள் நடைபெறும்.மேலும் மிக பழமை வாய்ந்த கிருஷ்ணர் பஜனை கோவில் உள்ளது.மேலும் கொள்ளாபுரி அம்மன், மந்தைவெளி அம்மன்,பொன்னி அம்மன்,பாளையத்து அம்மன், இராமலிங்க அடிகளார் ஆலயம்,சேரி அம்மன் ஆலயம், கங்கை அம்மன்,கன்னி அம்மன், விநாயகர் போன்ற தேய்வங்களுக்கு ஆலயம் அமைந்துள்ளது.
🌸திருவிழாக்கள்🌸
- சித்திரை மாதம் திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா நடைபெறும்.மேலும் கொள்ளாபுரி அம்மன் மற்றும் பாளையத்து அம்மனுக்கும் கூழ் வார்த்தல் நடைபெறும்.
- ஆடி மாதத்தில் பாளையத்தம்மன், மந்தைவெளி அம்மன், பொன்னி அம்மன் மற்றும் சேரி அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும்.மேலும் மாரியம்மனுக்கு சிறப்பான முறையில் ஊர் திருவிழா நடைபெறும்.
- ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்.
- புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை அன்று பஜனை கோவிலில் கிருஷ்ணர் ஊர்வலம் நடைபெறும்.
- கார்த்திகை மாதம் தீபத்திருவிழா நடைபெறும்.
மார்கழி மாதம் முழுவதும் பஜனை கோவிலில் பஜனை நடைபெறுகிறது.
- தை மாதம் பொங்கல் திருவிழா நடைபெறும்.
- மாசி மாதம் சிவராத்திரி பூஜை நடைபெறும்.
- மேலும் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு மற்றும் சனிக்கிழமை பஜனை நடைபெறும்.அதுமட்டுமன்றி அமாவாசை, பவுர்ணமி நாளில் பாளையத்தம்மன் மற்றும் பொன்னி அம்மனுக்கு தாலாட்டு நடைபெறும்.
🌸 பெயர் காரணம் தாளி என்பது ஒரு வகையான பனை மரம் இந்த தாளி வகை பனை மரம் அதிகமாக நிறைந்து காணபட்ட காரணத்தால் தாளிக்கால் என்று பெயர் பெற்றது.
🌸 பள்ளி கூடம் கிராமத்தில் தொடக்கபள்ளி மற்றும் உயர்நிலை உள்ளது.மேலும் இரண்டு அங்கன்வாடி உள்ளது.
🌸 தெருக்கள்
- பஜனை கோவில் தெரு (அல்லது) பெரிய தெரு.
- சின்ன தெரு (அல்லது) ஈஸ்வரன் கோவில் தெரு.
- ஆஞ்சநேயர் கோவில் தெரு.
- விநாயகர் கோவில் தெரு.
- கனகதுர்கை அம்மன் கோவில் தெரு.
- பாளையத்தம்மன் கோவில் தெரு.
- திரௌபதி அம்மன் கோவில் தெரு.ஆகிய தெருக்கள் உள்ளன.
🌸 இயற்கை வளம் கிராமத்தின் முதன்மையான தொழில் விவசாயம் ஆகும்.பழைய ஏரி, பெரிய ஏரி,காளம்புடி ஏரி என மூன்று ஏரிகள் உள்ளன.
🌸 சமயம் மற்றும் சாதி இந்த கிராமத்தில் 99% மக்கள் இந்துக்கள் ஆகும்.பிற 1% மக்கள் கிறித்தவ சமயம் ஆகும்.இந்த கிராமத்தில் ரெட்டியார்(வன்னியர் குல சத்திரியர்), யாதவர்கள், நாயுடு மற்றும் வண்ணர்,பண்டிதர்(ஓரிரு குடும்பங்கள் உள்ளன) மேலும் பறையர் ஆகிய சாதியினர் வாழ்கின்றனர்.