திருச்சிற்றம்பலம்

*அஷ்ட லிங்க சித்தர் ஸ்ரீ அருணாச்சல மூப்பனார் சுவாமிகள்*

*1.தோற்றம்*

பாண்டிய நாடே பழம்பதி ஆகவும்   என்பது திருவாசக வரிகள். (2.கீர்த்தி அகவல்)

அப்படி பழமையான தென்பாண்டி நாட்டின் திவ்ய ஸ்தளமாக விளங்குவது சாலி பதி எனப்படும்  திருநெல்வேலி நன்னகரம்.

அந்த நன்னகரத்தில் அருள் பாலிக்கும்

அருள்மிகு ஸ்ரீ காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர்

திருவருளால் சிவபக்தியில் சிறந்த *வில்லுமுத்து மூப்பனார்*  (தந்தை) *அய்யன் அம்மாள்* (தாய்) தம்பதியினருக்கு துந்துபி ஆண்டு பங்குனித் திங்கள் இரண்டாம் நாள் 16.03.1922  அன்று மூப்பனார் சுவாமிகள் பிறந்தார்கள்.

இவரது இயற்பெயர் எஸ்.வி.அருணாச்சலம் என்பது ஆகும்.

இவர் அவதாரம் செய்தது

பாளையங்கோட்டையின் அண்மையில் *செய்துங்கநல்லூர்*  என்ற சிற்றூர் ஆகும். (இச்சிற்றூர் இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அப்போது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது).

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்  வழியில் 17 கிலோமீட்டர் தொலைவில் இந்த சிற்றூர் உள்ளது.

இவர் சேனைத்தலைவர் மரபினை சேர்ந்தவர் என்றாலும் மூப்பனார் என்பது மரபு வழி பட்டப் பெயராக அமைந்திருந்தது.

அவர்களது குலத்தொழில் வேளாண்மையாகும்.

இத்தொழிலில் இவரது தந்தை வில்லு முத்து மூப்பனாருக்கு இவர் உதவியாக இருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:8LINGAM&oldid=4106522" இலிருந்து மீள்விக்கப்பட்டது