Alexkps
பிறப்பு: 09-04-1994ம் ஆண்டு வாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையம் எனும் சிறு கிராமத்தில் திரு.பழனிசாமி, திருமதி.சௌந்தர்யா பழனிசாமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
தொடக்ககல்வி: சிறு வயது முதலே புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் அதிகமுடையவராக திகழ்ந்தார்.எப்போதும் தாய் தந்தையரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வார். தனது பள்ளி படிப்பை சிங்கிபுரம் அருகே உள்ள பாரதி வித்யா பவன் எனும் ஒரு சிறு தொடக்க பாட சாலையில் தொடங்கினார். தனது 8ம் வயதில் 3ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது 7ம் வகுப்பு மாணவனின் புத்தகங்களில் உள்ள பாடத்தை தாமாக படித்து அதிலிருந்து ஆச்சர்யமூட்டும் கேள்விகளை கேட்டு ஆசிரியர்களை வியப்பிற்குள் ஆழ்த்தினார்.
உயர்கல்வி: 6ம் வகுப்பை தனியார் பள்ளியில் படிக்க போதிய பொருளாதாரம் இல்லாததால் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி தனது உயர் கல்வியை தொடர்ந்தார். அரசு பள்ளியில் படிப்பதை மிகவும் மகிழ்ச்சியாக எண்ணிணார். ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி வினா, மற்றும் பல போட்டிகளில் முத்திரை பதித்தார். 9ம் வகுப்பு வரை தனது கல்வியை அங்கு பயின்ற அவர் தனது 10ம் வகுப்பை பெத்தநாயக்கன்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். இங்கும் பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை அள்ளினார். இதனால் பாடத்தில் இவன் அதிக மதிப்பெண் பெற மாட்டான் என கூறிய சிலரின் முகத்தில் கரியை பூசும் விதமாக பத்தாம் வகுப்பில் 420/500 மதிப்பெண் பெற்றார். எப்போதும் புது விஷயங்களை கற்றறிந்து அதனை பிறருக்கு சொல்வதிலும், அறிவுரை வழங்குதலையும் வழக்கமாக கொண்டவர். 11,12ம் வகுப்பை வாழப்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொடர்ந்தார். இங்கு தான் தனது கணிணி மீதான ஆர்வத்தை வளர்த்து கொண்டார். பள்ளியில் எப்போதும் கணினி அறையில் இருப்பதையே வழக்கமாக கொண்டார். எந்த சிறப்பு வகுப்பிற்கும் செல்லாமல் தானாகவே கணிணி பற்றி பல நுணுக்கங்களை கற்று தேர்ந்தார். அச்சமயம் தனது தந்தையார் உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கயாயிருந்தார். இதனால் படிக்கும் போதே வேலைக்கு செல்லும் சூழ்நிலை உண்டானது. அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பல விஷயங்களை கற்று தேர்ந்தார். செல்போன் சர்வீஸ், கம்ப்யூட்டர் சர்வீஸ், ரேடியோ பழுது பார்த்தல், போன்ற பலவற்றையும் தாமாகவே சிறப்பாக கற்றறிந்தார். தந்தையின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவரால் கல்வியில் நாட்டம் செலுத்த முடியவில்லை. இதனால் 12ம் வகுப்பில் 688/1200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
கல்லூரி வாழ்க்கை: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு கல்லூரியில் 2011ம் ஆண்டு இளமறிவியல் கணினி துறையில் தனது கல்லூரி படிப்பை துவங்கினார். வழக்கம் போல் இங்கும் அவரது சாதனைகள் தொடர்ந்தன. சிறப்பான அறிவுத்திறனால் ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவராலும் ஈர்க்கப்பட்டார். கல்வி மீது அலாதி பிரியம் கொண்ட அலெக்ஸ் ஒரு பட்டப்படிப்பு போதாது என்று இளமறிவியல் மனோதத்துவம் மற்றும் இளங்கலை ஜோதிடம் ஆகிய பட்டப்படிப்பில் தொலைதூர கல்வி இயக்கம் மூலம் சேர்ந்தார். ஒரே சமயத்தில் மூன்று பட்டைய படிப்பையும் சிறப்பாக படித்தார். இதுவரை நடந்த அனைத்து தேர்வுகளிலும் அனைத்து பட்டைய படிப்பிலும் வெற்றிபெற்றார். சக மாணவர்களையும் தன்னை போல படிக்க தூண்டுகோலாய் அமைந்தார்.