வணக்கம். நான் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் & தொலைத்தொடர்பியல் துறையில் இளநிலைப் பட்டமும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் & பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றேன். தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வாசம். கணினி தள மேலாண்மை ஆலோசகனாக பணிபுரிகிறேன். விகிபிடியாவில் நான் எழுதத்தொடங்கியதன் நோக்கங்கள் :

  • எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி சொல்வது.
  • முன்பு படித்து, உபயோகித்து பின்பு மறந்து போன விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்காக எழுதுவது.
  • தெரியாத அல்லது அரைகுறையாக தெரிந்த விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக அவை பற்றி எழுதுவது. (அப்போதுதான் அவைபற்றி புதிதாக படித்து அலசி ஆராய முடியும்....பயந்துவிடவேண்டாம்....தெரியாதவை பற்றி நான் அதிகமாக எழுதப்போவதில்லை)

சமீபத்தில்தான் இங்கே எழுதத் தொடங்கினேன். வேறு எதுவும் இப்போது சொல்வதற்கு இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alphanumeric&oldid=270435" இருந்து மீள்விக்கப்பட்டது