வேப்பம் பிண்ணாக்கு அல்லது வேப்பம் கொட்டையை நன்கு நசுக்கி பொடியாக்கி (2 மி.மி. சல்லடையில் சலிக்க வேண்டும்). யூரியாவுடன் 20 % அளவில் இரண்டயும் கலந்து ஒரு இரவுப்பொழுது வைத்திருந்து பயன்படுத்தவேண்டும். யூரியா, ஜிப்சம், வேப்பம் பிண்ணாக்கு 5 :4:1 என்ற விகிதத்தில் கலந்தும் தழைச்சத்தின் பயன்படும் திறனை அதிகரிக்காலாம். 100 கிலொ யூரியாவிற்கு 1 கிலோ நிலக்கரித்தார் தேவைப்படும். தாரை குறைந்த அளவு வெப்பத்தில் காய்ச்சி 1.5 லிட்டர் மண்ணெண்னையுடன் கலந்து பின்னர்100 கிலோ யூரியாவுடன் கலந்து நன்கு கலக்கி நிழலில் உலரவைத்து பின்னர் இடலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட யூரியா ஒரு மாதம் வரைகூட வைத்து பயன்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Alwartbalaji&oldid=2024003" இலிருந்து மீள்விக்கப்பட்டது