பயனர்:Alwartbalaji/மணல்தொட்டி
அங்கக வேளாண்மை ஏன் தேவை வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது. அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.