என் இயற்பெயர் ஆனந்தவேல், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வீரசிங்கன்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். பேர்பெரியான்குப்பம் அரசு மேனிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இளங்கலை தமிழ் (பி.ஏ) பட்டத்தையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் முதுகலை (எம்.ஏ) தமிழ், ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்)தமிழ், முனைவர் பட்டம் (பிஎச்.டி) தமிழ் ஆகிய பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில் முதுகலை தகவல் தொடர்பு இதழியல் பட்டத்தையும் பெற்றுள்ளேன். முதுகலையில் முதல் மதிப்பெண் பெற்று பல்கலைக்கழக பரிசைப் பெற்றவன். இளங்கலையில் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றவன். கல்லூரி ஆசிரியர் பணியாற்ற பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் நடத்தப்பெறும் யு.ஜி.சி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவன்.

கணினித் தமிழில் மிகுந்த ஆர்வமுடையவன். எனவே தமிழின் பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளை இங்கு உருவாக்க வேண்டும் என்பது என் அவா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ananthavel&oldid=997749" இலிருந்து மீள்விக்கப்பட்டது