அனோராஜ்

செப்டம்பர்  மாதம் 19 ம் நாள் 1989 ம் ஆண்டு1989 யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்வேலி கிராமத்தில் பிறந்தார்.

இவரின் தந்தையார் இரத்தினேஸ்வரன் அப்பா, தாயார் விக்கினேஸ்வரி அம்மா . இவர்களின் மூத்த மகனே அனோராஜ் ஆவார்.

இவருக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர்.

இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை நீர்வேலி

தமிழ் கலவன் பாடசாலையிலும்,தரம்

ஐந்து தொடக்கம் சாதாரண தரம் வரை உரும்பிராய்  இந்துக் கல்லூரியிலும், தனது உயர்தரக்  கல்வியை கோப்பாய்  கிறிஸ்டியன் கல்லூரியிலும் கற்று உயர்தரத்தில் சித்தி பெற்றார்.

கல்லூரி படிப்பினை நிறைவு செய்த அனோராஜ் தனது மீதிப்படிப்பினை ஊடகக் கல்வியில் செலுத்துவதற்கு முன் வந்தார். அந்த வகையில்  MRTC ( ஊடகத்துறை ), Multi media (Degree)  என்பவற்றைக் கற்று பட்டப்படிப்பினை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யமான "உதயன் பத்திரிகையில் Editoriyar ஆகவும் பின்னர் Reporter ஆகவும்" சேவை செய்வதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பத்திரிகை துறையில் இவர் காட்டிய ஈடுபாடானது "DAN தொலைக்காட்சியில் Editoriyar" ஆக சேவை செய்வதற்கான வாய்ப்பை வித்திட்டது.அதனைத் தொடர்ந்து மோட்டார் திணைக்களத்தில் பயிற்சிவிற்பாளராக மூன்று வருடங்கள் சேவை செய்வதென்று இவருடைய தொழில் துறையின் வளர்ச்சியானது பல துறைகளில் தன்னை நிலைநிறுத்தி வெற்றிப் பாதையை அமைத்து மென் மேலும் முன்னேறுவதற்கு ஏதுவாக அமைந்தது.

இவ்வாறு பல துறைகளில் கால் பதித்திருந்தாலும் தனது தொழிலை சிறந்த முறையில் நிலையான ஒன்றில் நிறுத்தும் நோக்கில் இலங்கையின் சர்வதேச கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்து அம்பாந்தோட்டை, ரத்னால, பிரான்ஸ் என பல இடங்களில் மாற்றங்கள் பல பெற்று இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சுங்கத்திணைக்கள அதிகாரியாக ( Immigration Officer)    சேவையாற்றி வருகின்றார்.[1]

  1. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anoraj&oldid=2779147" இலிருந்து மீள்விக்கப்பட்டது