Aragalur pon venkatesan
Joined 11 மார்ச்சு 2014
ஆறகழூர் வரலாறு-ஆறகழூர் பழங்காலத்தில் ஆறை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.ஆறகழூரை சுற்றி 6 அகழ்கள் அமைக்கப்பட்டு ஊரின் பாதுகாப்பு உறுதி படுத்தப்பட்டது.ஆறு அகழ்கள் சூழ்ந்திருப்பதால் ஆறகழூர் என்று பெயர் பெற்றது.ஆதாரம் ரா.பி.சேதுபிள்ளை 1947 எழுதிய பெண்ணை நாட்டு பெரு வீரர் என்ற நூலில் வாணர் குல வீரம் என்ற தலைப்பில் ஆறைக்கோட்டை என்ற பகுதியில் வருகிறது..
ஆறகழூர் வாணர்கள்,வாணாதிராசர்,வாணகோவரையர் போன்றவர்களின் தலைநகராக இருந்தது.பின் முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது