Arul Manoranjan
வணக்கம்,
அருள் மனோரஞ்சன் (Arul Manoranjan) என்ற முகப்பு பெயரிடப்பட்டுள்ள என்னை பற்றிய சிறு குறிப்பை அனைவருக்கும் பகிறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எனது பெயர் தி. அருள் பிரகாசம், சென்னை நகரின் ஒரு பகுதியான நங்கைநல்லூர் எனற பகுதியில் பிறந்து இந்த பகுதியில் சொந்தமாக வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறேன்.
தமிழ்பற்று கொண்டவன் நான் அறிந்ததை, என் பார்வைக்கு கண்டவை மற்றும் சிறந்த கட்டுரைகளை இங்கே கொடுக்கவுள்ளேன். இதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் தவறுகளை சுட்டிகாட்டினால் திருத்திகொள்கிறேன்.
நான் ஒரு கூகுள் மேப் மேக்கர் (Google Mapmaker)இன்றைய தேதி (21/12/2013)வரை 54,000 எடிட் (Edit) செய்துள்ளேன், கூகுள் மேப் மேக்கர்பிடியா (Google Map Makerpedia) என்ற தளத்தின் வடிவமைப்பு குழு உறுப்பினராகவும் கூகுள் நம்பத்தகுந்த சோதனையாளர்கள் (Google trusted testers)என்ற குழுவில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், மேலும் பல பாராட்டு பரிசுகளும் பெற்றுள்ளேன் மற்றும் கூகுள் இந்திய வரைபட சமூகங்களை நிர்வகிக்கின்றேன்.
எனது அனுபவங்களையும் புதிய கருத்துக்களை மற்றவர்களுக்கு பகிர்வது எனது வழக்கம். இந்த தமிழ் விக்கிபிடியாவில் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய சுயவிபரபக்கங்கள்