பயனர்:Arun Tvr/மணல்தொட்டி
இந்தியாவில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்காலில் உள்ள கோயில்
காரைக்கால் அம்மையார் கோயில் என்பது இந்தியாவில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலில் (தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டம் அருகில்) அமைந்துள்ளது. இக்கோயில் சைவ துறவியான நாயன்மார்களில் ஒருவரான புனிதவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும், காரைக்கால் அம்மையார் (தமிழில் காரைக்காலின் மதிப்பிற்குரிய தாய் என்பதாகும்) இக்கோயில் காரைக்கால் நகரின் மையத்தில் பாரதியார் தெருவில் (முன்னர் ரூ டி பொரியர் அல்லது பொறையர் தெரு) அமைந்துள்ளது.
வரலாறு
தொகுதற்போதைய காரைக்கால் அம்மையார் கோயில் மலைப்பெருமாள் பிள்ளை என்பவரால் 1929 இல் கட்டப்பட்டது. இக்கோயிலின் முக்கிய வழிபாடு புனிதவதி அல்லது காரைக்கால் அம்மையாருக்கு செய்யப்பட்டு வருகிறது. இக்கோயில் சோமநாதர் (சிவன்) மற்றும் சோமநாயகி ஆகியோருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் விநாயகருக்கு தனி சன்னதியும் உள்ளது.[1] காரைக்கால் அம்மையார் நாயன்மார், அறுபத்து மூன்று சைவ சித்தாந்த மரபின் மகான்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர்களில் மிகவும் பழமையான நபர்களில் ஒருவராகவும், முன்னணி பெண்மணியாகவும் உள்ளார். அவர் தனதாத்தனாருக்குப் மகளாக பிறந்தவர், இவர் செட்டியார் என்று அழைக்கப்படும் வணிகர் சமூகத்தைச் சேர்ந்தவர், ஒருவேளை நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் போன்ற பிரிவாக இருக்கலாம்.[2][3][4]
திருவிழா
தொகுஇக்கோயிலில் நடைபெறும் மாங்கனி திருவிழா தமிழ் ஆனி மாதத்தில் முழு நிலவு நாளில் ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெடரும் முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.(தமிழில் மாம்பழப் திருவிழா, பிரெஞ்சு மொழியில் ஃபெட் டெஸ் மங்குஸ் என்றும் மாங்கனி விழா அழைக்கப்படும் காரைக்கால் அம்மையார் பிக்ஷாதனாருக்கு அன்னம் (உணவு) வழங்கியதாக நம்பிக்கை உள்ளது. காரைக்கால் அம்மையார் அவருக்கு தயிர் சாதம் மற்றும் மாம்பழம் கொடுத்ததால், இந்த பொருட்கள் திருவிழா நாளில், கோவிலுக்கு அருகிலுள்ள ஒரு பெரிய மண்டபத்தில் மிக அதிகமாக விநியோகிக்கப்படுகின்றன.[5]
அருகாமையில் உள்ள இடம்
தொகு- காரைக்கால் கைலாசநதர் கோயில்
- காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோயில் https://temple.dinamalar.com/news_detail.php?id=103499
- சந்திர தீர்த்தம், குளம்
==மேற்க்கோள்கள்==
- ↑ pondyonline.com
- ↑ "Nagarathar children trace their roots" (in en). The Hindu. 2016-08-16. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Nagarathar-children-trace-their-roots/article14571805.ece.
- ↑ "Welcome to Nagarathar Ikkiya Sangam". nagaratharikkiyasangam.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-28.
- ↑ "Karaikkal Ammaiyar Temple, Karaikkal | Aalayangal Arputhangal | 04/01/2016 | Puthuyugam TV". YouTube. Puthuyugam TV. 2016-01-04.
- ↑ www.hindu.com