Azhagendiran
Joined 10 சூன் 2021
இது ஒரு திரைப்பட கதை
பேக்கரி ஒன்றில் வேலை பார்க்கும் மாறன் (கிஷோர்) பற்றிய கதையாகும். அவனும் அவனது மனைவியும் (லதா ராவ்) வாடகைக்கு வீடு தேடினர். ஒரு வீட்டு தரகர் வாயிலாக மாறன் பொருளாதாரத்திற்கேற்ப வீடு ஒன்று கிடைத்தது. ஆனால் அந்த வீட்டில் குடிபுக பல கட்டளைகள் இருந்தன. அதில் 4 நபர்கள் கொண்ட குடும்பம் மட்டும் தான் குடிவர முடியும் என்ற கட்டளையும் அடக்கம். ஆனால் மாறனின் மூன்று குழந்தைகளையும் சேர்த்தால் மொத்தம் 5 நபர்கள். அந்த வீட்டில் குடிபுக தனக்கு 2 குழந்தைகள் என்று பொய் சொல்லுகிறான் மாறன். மறைத்த மூன்றாவது குழந்தையை தனது மிதிவண்டி டப்பாவில் மூடி, தினமும் பள்ளிக்கு அனுப்புகிறான். அந்த குழந்தையை மறைக்க பல வழிகளை கையாளுகிறான். பின்னர் என்னவானது என்பது தான் மீதிக் கதை.