என்னுடைய பெயர் மோகனகிருஷ்ணசாமி. நான் திண்டிவனம் அருகே உள்ள அழகூர் என்னும் ஊரில் பிறந்தேன். என்னுடைய தந்தை பெயர் கி.மணிவண்ணன் ஐயர். தாயார் ம.ரமாபிரபா மற்றும் சகோதரர் பெயர் ம.நித்தியபிரகாஷ்.

வள்ளல் என்ற குலத்தில் பிறந்த நான் என்னை பெற்றெடுத்து சுமந்த ஊரான அழகூர் என்பதை என் பெயருக்கு முன்னால் இணைத்து அழகூர் வள்ளல் ம.மோகனகிருஷ்ணசாமி என்று எழுத தொடங்கினேன்.

எனக்கு சிறு வயது முதலே தமிழ் மொழி மீது நாட்டம் உண்டு. பள்ளிகளில் நடக்கும் கவிதை போட்டி, பேச்சு போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்டு முதல் பரிசு பெறுவேன். அந்த ஆர்வம் சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது ஓரளவிற்கு கவிஞராக, எழுத்தாளராக, உருவேடுத்துள்ளேன்.

இறைவன் அருளால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் "தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?" என்ற புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.

நம்மை போன்ற படைப்பாளிகளின் திறமைகளை உலகுக்கு எடுத்து காட்டும் wikipediaகாம்'க்கு நன்றி..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Azhagoor_Vallal&oldid=1159748" இலிருந்து மீள்விக்கப்பட்டது