Bodhibagavan
கள்ளிமடையான் நெல் ரகம்
கள்ளிமடையான் (Kallimadaiyan) நெல் வகை பாரம்பரியமாக பயிர் செய்த நெல் வகை.
குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் களர்,உவர் நிலப்பகுதியில் செழிப்பாக வளரும் தன்மைக்கொண்டது.
தொடர்ச்சியாக பயிர் செய்த இந்த நெல் ரகம் ஒட்டு ரக நெல் அறிமுகம் ஆன பிறகு பயிரிடல் பரப்பு குறைந்து நாளடைவில் இந்த ரகம் பயிரிடாமல் மறைந்து போனது.
கள்ளிமடையான் நெல் மற்றும் அரிசி, பயிரிடும் முறைகள் பற்றி தகவல் மட்டும் மக்களிடம் இருந்தது.
2016 ஆண்டில் இயற்கை உழவர் பழ.ஆறுமுகம் மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்து வந்தார்கள்.
இவருடைய இளைய மகன் போதிபகவன் பொறியியல் முடித்து விட்டு இவர்களுடன் இனைந்து இயற்கை வேளாண்மை செய்து வந்தார். இவருடைய நண்பர் வடக்கு மாதவி கிராமத்தில் உள்ள செல்வக்குமார் மூலமாக கள்ளிமடையான் நெல் அவருடைய அம்மா தொடர்ந்து வயலில் பயிர் செய்வது தெரிந்துக்கொண்டார்.
அவர்களிடம் இருந்து நெல்வாங்கி பயிர் செய்து அதன் தகவல், பயிரிடும் முறைகள் பற்றி தெரிந்துக்கொண்டார்.
அதன்பிறகு 2018 ஆண்டு பெரம்பலூரில் வருடம்வருடம் நடைப்பெரும் "ஆடிப்பட்டம் தேடி விதை நாடி வருகிறது நாட்டு விதை" என்ற விதைத்திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த உழவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர். ஆ. கலியப்பெருமாள் முதல் விதை நெல் வாங்கினார். உழவர் செல்வக்குமார் வழங்கினார்.
இயற்கை உழவர் பழ.ஆறுமுகம் இந்தகள்ளிமடையான் நெல் பயிரிடும் முறைகள் குறித்து தகவல் தொகுத்து வழங்கினார்.
பட்டம்:
சம்பா பட்டம் ஏற்றது.
150 நாள் வயது என்பதால் ஆடி முதல் ஐப்பசி வரை நாற்று விட்டு நடவு செய்யலாம்.
விதை அளவு:
ஏக்கருக்கு 7 முதல் 10 கிலோ வரை போதும்.
நாற்றுவிடும்முறை:
சேற்று நாற்றாக விடுதல் நல்லது.
பரவலாக நாற்று விடனும், இடைவெளி இருக்க விடனும்.
நடவுமுறை:
ஒற்றை நாற்று நடவுமுறையில் நடவு செய்யவேண்டும்.
15-20 நாள் இடைவெளியில் நாற்றை பிடிங்கி நடவு செய்யனும்.
நடவுக்கு முன்பு இயற்கை இடுப்பொருட்கள் பஞ்சகவ்யா 500மில்லி கரைசலை 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் பயிர் வேர் நளைத்து நடவு செய்யனும்.
1 அடிக்கு *1அடி இடைவெளியில் கயிறு பிடித்து சாலை நடவு செய்யவேண்டும்.
ஒருப்பயிர், இரண்டுப்பயிர் நடவுசெய்தால்போதும். ஆழமாக நடக்கூடாது. இதனால் எளிதாக பயிர் புதுவேர் பிடிக்கும், எளிதாக பச்சைக்கட்டும்.
இடுப்பொருட்கள் விடுதல்:
இயற்கை இடுப்பொருகளான அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யா, மீன்அமிலக்கரைசல், பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் பயன்படுத்தினால் போதும்.
வளர்ச்சி:
5 அடி உயரம் வரை வளரும்.ஒரு தூரில் ஐம்பது முதல் எழுவது தூர் (புடை) இருக்கும்.
உயரமாக இருப்பதால் மாட்டிற்கு தேவையான வைக்கோல் கிடைக்கும்.
பாதிப்பு:
இயற்கை வேளாண்மை முறையில் செய்வதால் பெரிதாக பாதிப்பு ஏற்ப்படாது.
இலை வெள்ளை, பச்சைப்புழு, தண்டுதுளைப்பான், வென்கதிர் தாக்கம் இருந்தால் இயற்கை பூச்சிவிரட்டி, மற்றும் தேமோர் கரைசல் தெளித்தால் போதும்.
புகையான் நோய் தாக்கம் இருக்காது.
அறுவடை:
உயரமாக வளர்ந்து இருப்பதால் கையால் அறுவடை செய்து, கட்டுகட்டி கைமுறையில் அடித்து எடுக்கலாம். அல்லது ஏறி வண்டி(கட்டு) வண்டியில் அடிக்கலாம்.
மகசூல்:
நன்றாக வரக்கூடியது ஏக்கருக்கு 2000கிலோ கிடைக்கும்.
பாதுகாப்பு:
மாதம் ஒரு முறை பூச்சி விரட்டி தெளிக்கவும்.
வாரம் இரண்டு நாள் அமிர்த கரைசல் தண்ணீர் உடன் கலந்து விடவேண்டும்.
மாதம் ஒரு முறை பஞ்சகவ்யா, மீன் அமிலக்கரைசல் தெளிக்கவும்.
கதிர் வந்தவுடன் தெளிக்கக்கூடாது.
அரிசி:
வெள்ளை நிறமாக இருக்கும்.
பச்சை மற்றும் புழுங்கல் அரிசியாக பயன்படுத்தலாம்.
பொங்கல், இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, முறுக்கு, அதிரசம் ஆகிய செய்யலாம்.