பயனர்:DEEKAVITHANKL/மணல்தொட்டி

    சோபியா டி மெல்லோ ப்ரெய்னர். 
      போர்த்துக்கீசிய மொழியின் மிக முக்கியமான கவிர்களுள் ஒருவர் சோஃபியா டி யெல்லோ ப்ரெய்னர். ஒரு பணக்கார குடும்பத்தில் 1919-ல் பிறந்த இவர் 12 வயதில் பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் படித்த ஹோமரின் "ஒடிசி"அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.    
  
    இவரின் முதல் கவிதைத் தொகுப்பு 1944-ல் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.இந்த பிரபஞ்சத்துடன் உறவு கொள்வதற்கான மிக முக்கியமான சாதனமாக கவிதையை சோபியா கருதினார்.   
    
      கவிதை என்பது இந்த உலகத்துடனான எனது புரிதல்,பொருட்களுடனான எனது நெருக்கம்,எது நிதர்சனமோ அவருடனான என் பங்கேற்பு, குரல்களுடனான பிம்பங்களுடனான எனது ஊட்டம். ஆகவேதான், கவிதை என்பது ஆதர்ச வாழ்வை அல்ல,நிதர்சனம் வாழ்வை பற்றிப் பேசுகிறது என்று அவர் சொல்லியுள்ளார்.   
       பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள்,இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,சிறுவர் இலக்கியம் என்று தொடர்ச்சியான எழுத்துச் செயல்பாடுகளால் நிரம்பியது சோஃபியாவின் வாழ்க்கை.   
     கவிதைக்காக போர்ச்சுகீசியர்கள் வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமாக 'பிரெம்யூ கமோய்'விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை 1999-ல் சோபியா பெற்றார்.2001-ல் 'மாக்ஸ் ஜேகப்'என்ற கவிதை விருதையும் பெற்றார்.   
  மார்ச்-5,தி இந்து நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEEKAVITHANKL/மணல்தொட்டி&oldid=2279913" இலிருந்து மீள்விக்கப்பட்டது