Dee seethass nkl
குடிநீரில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன.இவைகள் பாக்டீரியா என அழைக்கப்படுகின்றன.இந்த நுண்ணுயிரிகளால்தான் நீர் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.குடிநீர் குழாய்களில்தான் இந்த நுண்ணுயிரிகள் அதிகம் காணப்படுகின்றன.இவை குழாய்களின் உள்ளே ஒரு நுண்ணிய படலத்தை (பயோபிலிம்) உருவாக்கி, நீர் மாசுபடாமல் காக்கிறது.சுத்திகரிப்பு நிலையங்களைவிட, நுண்ணுயிரிகளின் உதவியால் குழாய்களில்தான் குடிநீர் அதிகம் சுத்தம் செய்யப்படுகிறது. இது, முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. தற்போதைய ஆராய்ச்சியின்போது எதிர்பாராதவிதமாக ஒரு மில்லி லிட்டர் நீரில் 80ஆயிரத்துக்கும் மேலான நுண்ணுயிரிகள் இருப்பது தெரிய வந்தது.இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயலை தொடர்ந்து கண்காணித்து வந்த போது, நீரின் பாதுகாப்புக்கு காரணமாக இருப்பது தெரிந்தது. இதை சுவீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கேத்தரின்பால் தெரிவித்தார். ஒரு டம்ளர் (100மில்லி) தூய்மையான குடிநீரில் ஒரு கோடிக்கும் அதிகமான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன. மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால் இந்த நுண்ணுயிரிகளின் பணி தெரிய வரும். பாட்டில்களில் நாம் செயற்கையாக சுத்தப்படுத்தி அடைத்து விற்கும் நீரைவிட குழாய்களில் இயற்கையான நுண்ணுயிரிகளால் சுத்தப்படுத்தப்படும் நீர் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.