பயனர்:Devid Salamon/மணல்தொட்டி
தாயின் இழப்பு
தொகுகருப்பையில் இருந்து நான் வழுக்கிவிழுகையிலே
கலங்கிய கண்களுடன் கட்டிஅணைத்த மார்பகங்கள்.
தத்தி நடக்கையிலே தட்டுப்பட்டு வீழ்ந்திடாமல் கருத்தாய் வளர்த்த கைகள்.
இரவுகூட தூங்கையில நான் தூங்க மறுப்பேனு கண்ணுறங்க மறுத்த கண்கள்
பொத்தி பொத்தி வளர்த்தென்னை பக்குவமாய் படிக்க வச்சி
பள்ளி காலம் முழுவதுமே பட்டினிய காட்டவில்லை.
வசதியே இல்லனாலும் வாய்நிரம்ப புன்னகையும்,
வயிறு நிரம்ப பட்டினியும் காலமெல்லாம் சோறு போடும் என் தாயின் வைராக்கியமும்
பருவத்தை தொடும் வரை எப்பவுமே உணர்ந்ததில்ல!
என்னடா வாழ்க்கையிது என நானும் அழுக்காமல்,
ஆசையுடன் வளர்ந்து வந்த அருமை மிகு நாட்கள் தனை அசை மீட்டும் போதுதான் -
இப்போதும் உள் நெஞ்சின் ஓரத்தில் சுருக்கென்று குத்துகின்ற ஊசிமுனையின் நெருடலினால்
கனத்த இதயத்துடன் கதறுகின்றேன் நான்-தனிமையிலே!