குட்டிக்கதை: ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன். அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள். அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான். துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார். அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது. அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார். பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறினார்.

அலெக்ஸ் மகா தேவ்


ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்டிய ஒரு பாடல்!!

நாம் யார்? நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.

சோழன் செங்கணானிடம் போரில் தோற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சிறை பிடிக்கப்படுகிறான். குடவாயிற் கோட்டத்துச் சிறைக் கொட்டடியில் அவனுக்கு தாகம் எடுக்கிறது. சிறைக் காவலன் அசட்டையாக தாமதம் செய்து தண்ணீர் தருகிறான். அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடலின் பொருள் :

இறந்துப் பிறக்கும் குழந்தையை கூட அப்படியே புதைத்து விடாமல் வீர மரபில் பிறந்தது என்பதற்கு அடையாளமாக அதன் மார்பை வாளால் கீறி புதைக்கும் வீரத் தமிழ் மரபில் வந்த வீரன் தனக்கு அசட்டையாக நீரையும், உணவையும் தரும் பகைவனிடம் பிச்சை கேட்டு உண்பான் என நினைக்கிறாயா? என்று கேட்டு விட்டு உணவும்,நீரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீப்பதை விவரிக்கும் பாடல் வரிகள்.

உலகின் எந்த இனமும் இவ்விதமான பாடல் பெரும் பாக்கியத்தை பெறவில்லை.பாடல் வழி இன்னமும் வென்று வாழ்கிறான் இரும்பொறை.

அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடல்,

திணை : பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

"குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத், தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?"

தனுஷன்:-தொகுப்பு

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dhanu~tawiki&oldid=1840972" இலிருந்து மீள்விக்கப்பட்டது