மாடித்தோட்டம்

நகர்புறங்களில் வீட்டைச்சுற்றி செடிகள் நடுவதற்கு போதிய இடம் இல்லாததால் மாடியில் தோட்டம் அமைக்கும் பழக்கம் பரவிக் கொண்டு வருகிறது. மாடியில் செடிகள் வளர்ப்பதற்கு முன் அங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் தான் அந்த மாறுபட்ட சூழ்நிலைகளில் செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

மாடிச் சூழ்நிலைகள் மாடியில் இருக்கும் செடிகளுக்கு குறைந்த அளவு மண்தான் கிடைக்கும். அதனால் ஆழமாக வேர்விட்டு வளர முடியாது. குறைந்த அளவு மண்ணில் ஊட்டச் சத்துகளும் குறைவாகத் தானிருக்கும், அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாடியில் வெயில், வெளிச்சம் மற்றும் காற்று அதிகமாக இருக்கும். எனவே தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும் மண்ணில் உள்ள ஈரம் விரைவில் காய்ந்துவிடும். காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் செடிகள் விரைவில் வாடிவிடும். ஆகவே மாடியில் உள்ள செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியமாகிறது. மாடியில் வடிகால் எளிதாக இருக்கும். தண்ணீர் எப்போதும் தேங்காது. ஆனால் மழைக் காலங்களில் மண்ணிலுள்ள ஊட்டச் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து எளிதில் வெளியேறிவிடும். அதனால் செடிகளுக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்களை நாம் அடிக்கடி செயற்கை உரங்கள் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் சிறிதுசிறிதாக பல தவனைகளில் இட வேண்டும். கடுமையான வெயிலையும் , மழையையும், காற்றையும் தாங்கி வளரக்கூடிய செடிகள் மட்டுமே மாடிச்சூழ்நிலைகளில் வளரும். மாடியில் செடி வளர்ப்பதற்கு இரண்டு வழிகள் உண்டு. தொட்டிகளில் செடிகளை வளர்த்து மாடியில் பல இடங்களிலும் வைத்து விடலாம் அல்லது மாடியில் குறிப்பிட்ட இடங்களில் மண் கலவையைப் போட்டு அதில் நேரடியாகச் செடிகளை நட்டு விடலாம். எந்த முறையைக் கையாண்டாலும் முக்கியமாக ஒன்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது மாடியில் எவ்வளவு எடையை ஏற்றலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாடியில் புல் தரை

ஒரு பசுமையான புல் தரையை மாடியில் அமைத்துவிடலாம். புல் தரை அமைக்க வேண்டிய பகுதியில் தண்ணீர் உறிஞ்சாத பொருளினால் மெழுகி தரையை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மண் கலவையை இட வேண்டும். தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக ஒரு பக்கம் சற்று சரிவாக இருக்க வேண்டும். புல் தரை அமைப்பதற்கு சுமார் 10 முதல் 12 செ.மீ உயரத்திற்கு மண் கலவை போட்டால் போதும்.

நல்ல வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய அறுகம்புல், ஜப்பான் புல், மணிலா புல், கொரியன் புல், ஹைதிராபாத் புல், குட்டை பெர்முடா ஆகிய புல் வகைகளும் மாடியில் நடுவதற்கு ஏற்றதாகும்.

மாடியில் இருக்கும் புல்தரைக்கு தவறாமல் உரமிடுதல் வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் , 50 மூரியேட் – ஆப் – பொட்டாஷ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைப் புல் நடுவதற்கு முன்பாக மண் கலவையோடு கலந்து விட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை சூப்பர் பாஸ்பேட் உரத்தையும் மூரியேட் – ஆப் – பொட்டாஷ் உரத்தையும் இதில் பாதி அளவுக்கு கொடுக்க வேண்டும்.

தொட்டிகள் மாடித் தரையில் மண் கலவை போட்டு நேரடியாக செடிகள் நடுவதை விட தொட்டிகளில் செடிகள் வளர்த்து மாடியில் வைப்பது நல்லது. தொட்டிகள் அகன்ற அடிப்பாகத்தை கொண்டதாக இருந்தால் காற்றில் சாய்ந்து விடாமல் இருக்கும். கனமான பெரிய தொட்டிகளை அஸ்திவாரத்திலிருந்து எழுப்பப்பட்ட சுவற்றின் மேல் வைக்க வேண்டும். சிறிய தொட்டிகளை கீழே சுவர் இல்லாத பகுதியில் கூட வைக்கலாம். பெரிய தொட்டிகளில் மற்றும் தாழ்களில் சிறிய மரங்களை வளர்க்கலாம். சுமார் 60 செ.மீ உயரமும் குறுக்களவும் கொண்ட தொட்டிகள் அல்லது பெட்டிகள் மரம் வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

கைப்பிடிச் சுவர்களையும் தொட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்தலாம். கைப்பிடி சுவற்றின் மேல் ஆங்காங்கே செடிகள் வைப்பது கட்டிடத்தின் அழகைக் கூட்டும் மாடியில் இடம் குறைவாக இருந்தால் சுவற்றில் குறிப்பிட்ட கான்கிரீட் பலகைகளைச் சொறுகி அதன் மேல் தொட்டியில் உள்ள செடியை வைக்கலாம். கான்கிரீட் பலகைகளுக்கு பதிலாக இரும்பு வளையங்களை சுவற்றில் பொருத்தி அதில் தொட்டிகளை வைத்து விடலாம்.

பந்தல்கள்

மேற்குப் பக்கத்து சுவர்களின் ஓரமாக ஒரு பந்தல் போட்டுவிட்டால் வசதியாக இருக்கும். பந்தல் போடுவதற்கான கால்களை மண் தரையில் எங்கு வேண்டுமானாலும் ஊன்றி விடலாம். ஆனால் மாடியில் கால்களை நிறுத்துவதற்கு சில சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கைப்பிடிச் சுவற்றில் இரண்டு மூன்று இரும்பு வளையங்களை ஒன்றின் கீழ் ஒன்றாக 50 செ.மீ இடைவெளியில் பொருத்தி அதில் மூங்கில் கம்புகளை சொறுகி விடலாம். வளையங்கள் சிறியதாக மூங்கில் அல்லது சவுக்கு மரக்கம்புகள் நுழையும் அளவுக்கு இருந்தால் போதும்.

மாடியில் வளர்ப்பதற்கேற்ற செடிகள் நல்ல வெயிலையும் முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத் தான் மாடியில் வளர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் வளரக் கூடிய எல்லா வகைச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால் மாடியில் குறைந்த அளவே மண் இருப்பதனால் மரங்களையும் பெரிய செடிகளையும் வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதினால் வண்ண வண்ண பூக்களையும், இலைகளையும் கொடுக்கக் கூடிய செடிகளை வளர்க்கலாம்.மாடித்தோட்டம்

மாடியில் வளர்ப்பதற்கேற்ற செடிகள் நல்ல வெயிலையும் முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத் தான் மாடியில் வளர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் வளரக் கூடிய எல்லா வகைச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால் மாடியில் குறைந்த அளவே மண் இருப்பதனால் மரங்களையும் பெரிய செடிகளையும் வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதினால் வண்ண வண்ண பூக்களையும், இலைகளையும் கொடுக்கக் கூடிய செடிகளை வளர்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:G_Piriya&oldid=2500413" இலிருந்து மீள்விக்கப்பட்டது