பயனர்:Geja Shreya/மணல்தொட்டி

ஹெலிக்ஸ் பாலம்

தொகு

ஹெலிக்ஸ் பாலம் என்பது சிங்கப்பூரில் உள்ள மெரீனா வளைகுடாவின் மத்தியப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் இணைக்கும் பாலமாகும். இது மக்கள் நடந்து செல்வதற்காகக் கட்டப்பட்டது. இது 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, அது முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்றுதான் அந்தப் பாலம் முழுமையாகக் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கட்டிட அமைப்பு

தொகு

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலிய கட்டிட வடிவமைப்பாளர்கள் அப்பாலத்தை வடிவமைத்தனர். அதன் மேற்கூரையானது கண்ணாடி, எஃகு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. அது அப்பாலத்தில் நடக்கும் பாதசாரிகளுக்கு நிழல் தருகிறது. அப்பாலத்தில் நான்கு இடங்களில் சுற்றி இருக்கும் இடங்களைப் பாரப்பதற்கு ஏதுவாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளையும் மெரீனா வளைகுடாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் காண்பது ஓர் அரிய காட்சியாகும். இரவு நேரத்தில் சிங்கப்பூர் மின் விளக்குகளோடு மிக அழகாகக் காட்சியளிக்கும். அது காண்போரைக் கவரும் காட்சியாகும்.

                 இப்பாலத்தின் அமைப்பானது மனிதனுடைய 'டிஎன்ஏ' (DNA) அமைப்பை ஒத்துள்ளது. குறிப்பாக, இது இடது கை பழக்கம் உள்ளவர்களின் உயிரணுக்களின் அமைப்பைப் போல் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள சிறந்த கட்டடக் கலை அமைப்பில் இதுவும் ஒன்று. எனவே, சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் இதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் உலகில் வேறெங்கும் இல்லை என்று கருதுகிறது. உலக கட்டட அமைப்புகளுக்கான விருது வழங்கும் விழாவில் உலகிலேயே சிறந்த போக்குவரத்துக்கான கட்டடம் இது என்ற விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூரின் கட்டட மற்றும் கட்டுமான அமைப்பால் (BCA) இதற்கு ஒரு விருது அளிக்கப்பட்டது. இந்த விருது அதன் பாதுகாப்பான அமைப்பிற்கும் கட்டுமானத்திற்கும் வழங்கப்பட்ட ஓர் உன்னத விருதாகும்.  

கட்டிட வடிவமைப்பு

தொகு

இந்த கட்டட அமைப்பானது வடிவமைப்பின்போதும் கட்டப்பட்ட போதும் பல சவால்களை எதிர்நோக்கியது. இதன் சிக்கலான அமைப்பே இதற்குக் காரணம். சிங்கப்பூரின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இப்பாலம், மழை, வெயில் போன்றவற்றின் போதும் பாதுகாப்பாகச் செல்ல ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் 280 மீட்டர் ஆகும். இதன் எஃகு கம்பிகளை ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைவரை நீட்டினால் இதன் நீளம் 2.25 கிலோமீட்டராக இருக்கும். பெரிய மற்றும் சிறிய முப்பரிமான (Helices) அமைப்புகள் எதிர்திசையில் ஒன்றன் மேல் மற்றொன்று பின்னப்பட்டது போல் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விட்டம் முறையே 10.8 மீட்டர் மற்றும் 9.4 மீட்டர் ஆகும். உள் முப்பரிமாண அமைப்பில் 5 குழாய்களும், வெளி முப்பரிமாண அமைப்பில் 6 குழாய்களும் உள்ளன. இப்பாலம் ஏறக்குறைய மூன்று மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இருக்கும். இந்தப் பாலத்தின் மொத்த எடை 1700 டன் ஆகும்.

          இப்பாலத்தின் வளைவுகளிலும் குழாய்களிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பாலத்தின் உட்பகுதி முழுவதும் வெள்ளை நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், உட்புற மேற்கூரையில் உள்ள கண்ணாடியும் எஃகும் விளக்கு ஒளியில் மின்னுவதால் பாதசாரிகளுக்கான பாதை வெளிச்சமாகக் காணப்படுகிறது. வெளிப்புறம் நோக்கி எரியக்கூடிய விளக்குகள் மிகவும் அழகாக உள்ளன.

            இந்தப் பாலம் இப்பொழுது சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது. மெரீனா வளைகுடா பகுதிக்குச் செல்லும் பயணிகளின் பாதம் இப்பாலத்தில் படாமல் இருப்பதில்லை. இந்தப் பாலத்தில் இருந்து சிங்கப்பூரின் மற்ற பகுதிகளைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். 

References:

https://en.wikipedia.org/wiki/Helix_Bridge

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Geja_Shreya/மணல்தொட்டி&oldid=2250601" இலிருந்து மீள்விக்கப்பட்டது