Gomathisankar
63 நாயன்மார்களின் வரலாற்றைத் தெரியப் படுத்தும் சேக்கிழாரின் பெரிய புராணத்தின் காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.இந்நூலில் மாணிக்கவாசகர் பற்றிக் கூறப்படவில்லை.எனில் மாணிக்கவாசகர் சேக்கிழாருக்கு பிந்தையவரா? இன்னும் பேசுவோமே. நன்றி, அன்பன் கோமதிசங்கர்,திருநெல்வேலி.
மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவம் வாய்ந்த பெயர் "பாரதி" பாரதி என்றால் 'கலைமகள்' என்று பொருளாம்.தனது பாலப் பருவத்திலேயே இப்பட்டம் பெற்ற கலைமகன் மகாகவி பாரதியார். எட்டயபுரத்து சுப்பையா பழைய நெல்லை மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் சிற்றூரில் பிறந்த 'பாரதி'யின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.'சுப்பையா'என்று குடும்பத்தார் அழைத்தனர்.எட்டயபுரம் சமஸ்தானத்தில் வேலைபார்த்தார் பாரதியின் தந்தை.ஒரு நூற்பாலையும் நடத்தி வந்தார்.இந்த நூற்பாலையில் ஏற்பட்ட பொருள் நட்டத்தால் பாரதியின் தந்தை மனமுடைந்து மரணத்தை தழுவினார்.தனக்கு ஏற்பட்ட இந்த சோகமும் துயரமும் வெள்ளையராலே நிகழ்ந்தது என்பது பாரதியின் இளம் மனதில் ஆழப்பதிந்தது.இந்த வடுவே பின்னாளில் பாரதியின் புரட்சிப் பரிமாணத்தின் தோற்றுவாயாய் இருந்தது என்று அவரின் 'சுயசரிதை'யிலிருந்தும்,பாரதி ஆய்வாளர், அமரர் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய 'பாரதி காலமும் கருத்தும்' என்ற ஆய்வு நூலின் மூலமாகவும் அறிகிறோம். (கட்டுரையை தொடர்ந்து எழுதுவேன்)