இணைய வானொலிகளின் பரிணாம வளர்ச்சியில் புதுவகை முயற்சிகளை ஒருங்கிணைத்து தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மை செம்மை என்பன பற்றிய தனித்தன்மைகளை மேலும் மெருகேற்றும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு 2008.11.23 தொடக்கம் உலா வரும் வாரணம் எப். எம். நேரடி நிகழ்ச்சிகளை 2009.11.23 இலிருந்து ஆரம்பித்தது. தற்போது இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் குறிப்பாக ஒலிபரப்பாளர்கள்,ஒளிபரப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஊடகவியலாளர்களை உருவாக்கிகொண்டிருக்கும் ஒரு நிறுவனம். இலங்கையின் புகழ்பூத்த மூத்த ஒலிபரப்பாளர்கள்,ஒளிபரப்பாளர்கள்,ஊடகமுன்னோடிகளால் பயிற்சி பட்டறைகள் மூலமாக கற்கைநெறி வழங்குகின்ற நிறுவனமாகவும் இது திகழ்கின்றது. www.varanamfm.com என்ற இணைய முகவரியை சொடுக்குவதன் மூலம் வாரணம் எப்.எம்.பக்கத்துக்கு உலாசெல்லலாம்.

         2010.01.07 அன்று யாழ்ப்பாணத்தில் தனது ஒலிபரப்பு சேவையினை ஆரம்பித்ததோடு ஒலிபரப்பு இதழியல் கல்லூரியினையும் ஆரம்பித்தது. இந்த வரலாற்று நிகழ்வின் மூலம் இலங்கையின்  வடக்கு கிழக்கில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இணைய வானொலி என்ற வரலாற்று பெருமையை வாரணம் எப்.எம். பெறுகிறது. அத்தோடு வடக்கு கிழக்கில் முதன்முதலில் தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றினால் தொடங்கப்பட்ட ஊடகவியல் கல்லூரி என்ற பெருமையினையும் வாரணம் எப். எம். ஊடகவியல்  கல்லூரி பெறுகிறது.இந்த வரலாற்று நிகழ்வுகளில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வானொலி ஒலிபரப்பை அங்குரார்ப்பணம் செய்து வைக்க, ஊடகவியல் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையால்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தற்பொழுது ஊடகவியலில் ஆர்வமுள்ள அதிக  மாணவர்கள்  கற்று பயன் பெறும் ஊடக கல்லூரியாக வாரணம் எப்.எம். ஊடக கல்லூரி திகழ்ந்து வருகின்றது. அத்தோடு யாழ்ப்பாண அறிவிப்பாளர்கள் சர்வதேச ரீதியில் புகழ் பெற ஓர் பாலமாக வாரணம் வானொலி திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியில் மிளிரும் இலங்கையின் சிறந்த இணைய வானொலியாக இது உள்ளது.

வாரணம் எப்.எம்மின் நோக்கம்:

தமிழ் ஊடகத்துறையில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கலும் இணைந்த சமூக சேவையும்.
          "தமிழ் ஊடகத்துறையின் புதிய வெளிச்சம் வாரணம் எப்.எம்."
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gunaa&oldid=487068" இலிருந்து மீள்விக்கப்பட்டது