பயனர்:HK Arun/இலங்கை
இலங்கை என இன்று தமிழிலும், லங்கா என சிங்களத்தில் வழங்கப்படும் சொல்லின் மூலம் தீவு என்றழைப்பதற்கான ஒரு இடப்பெயராகவே இருக்கமுடியும் என இலங்கையின் தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றாய்வாளருமான கா. இந்திரபாலா அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்.
மேலும் தென்கிழக்கு ஆசியாவின் ஆசுதிரோ - ஆசிய மொழிகளுடன் முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவும் இலங்கையும் கொண்டிருந்த தொடர்பை விளக்குவதாக, இன்று "தீவு" எனும் பொருள்படும் சொல்லாகவே "லங்கா" எனும் சொல், 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் வழங்கிவரும் சொல்லாக இருந்துள்ளது என்பதனையும் சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
- தென்னிந்தியாவின் தெலுங்கு மொழியில் "தீவு" என்பதற்கு "லங்கா" என்றே வழங்கிவந்தனர்.
- ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்குக் கரையில் உள்ள பல தீவுகளின் பெயர்கள் "லங்கா" எனும் பின்னொட்டுடன் "தீவு" எனும் பொருள்பட காணப்படுகின்றன.
- கோதாவரிக் கழிமுகத்தில் உள்ள தீவுகளின் பலத் தீவுகளின் பின்னொட்டுகளாக "லங்கா" என காணப்படுவதும், வடமொழியின் தொன்ம நூலாகிய இராமாயணத்தில் வரும் "லங்கா" இன்றைய இலங்கையைக் குறிக்கும் பெயர் என பலர் கருதியப்போதும், கோதாவரிக் கழிமுகத்தில் உள்ள ஒரு தீவே என சிலர் கருதியமையும் இந்த "தீவு" எனும் இடப்பெயருக்கு தென்னிந்தியப் பகுதிகளில் பழங்காலம் தொட்டே வழங்கப்பட்ட "லங்கா" எனும் பெயரும் எடுத்துக்காட்டுகள்.
- சங்கத் தமிழ்ச் செய்யுள்களிலும் மாவிலங்கை, மற்றும் தொன்மாவிலங்கை போன்றப் பெயர்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
- சங்கக் காலத்துக்குப் பின்னரும் தென்னிந்தியாவில் ஒரு தீவின் பெயர் உத்தரலங்கா (வடஇலங்கை) என்றும், தற்போதையை இலங்கையை "தென்னிலங்கை" என "இலங்கை/லங்கா" எனும் சொல் "தீவு" என்ற பொருளை உணர்த்துவதனை மேற்கூறிய சான்றுகளால் வெளிப்படுவதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கை என தமிழிலும், லங்கா என சமசுகிரதம், பாளி, சிங்களம் போன்ற மொழிகளிலும் தற்போது வழக்கில் உள்ள இடப்பெயர் சொல், திராவிட மொழிச் சொல்லாகவோ இந்து ஆரிய மொழிச் சொல்லாகவோ தோன்றவில்லை என்றும், பழங்காலத் தொட்டே (2000 ஆண்டுகளுக்கும் மேலாக) வழக்கில் இருந்துள்ளது எனலாம் என்றும் கூறுகிறார்.