ILANTHOODHU

செப்டம்பர் 22,1989 பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கி இன்று வரை எந்த தடையும் இல்லாமல் பத்திரிக்கை வானில் 24 ஆண்டுகளாய்ச் சிறகடித்துப் பறந்து கொண்டிருகிறது, ஏ.வி.சி கல்லூரியின் மாணவர் இதழ் இளந்தூது

           இது மாணவர்களுக்காக,
            மாணவர்களால்
            மாணவர்களே நடத்தும்
            ஒரு சீரிய இதழ் 

இதழ் நடத்துவது என்பது எளிய செயலன்று விட முயற்சியும், உழைப்பும் மிக முக்கியம். தொடக்க காலத்தில் மாத இதழாக வெளிவந்த இளந்தூது பொறுப்பாளர்களின் கல்வியை கருத்தில் கொண்டு 1993-1994 முதல் ஆண்டிற்கு இரு இதழ் என்று பருவ இதழாக வெளிவருகிறது.

        இதில் நாங்களே ஆசிரியர், இணையாசிரியர், துணையாசிரியர் என்று மூன்றாமாண்டு மாணவர்களை வகுத்து கொண்டு இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு மாணவர்களை உறுபினர்களாகவும், எங்கள் கல்லூரி ஆசிரியர் ஒருவரை ஒருங்கிணைப்பாளராகவும்  கொண்டும் இவ்விதழை நடத்திவருகிறோம். ஒவ்வோர் ஆண்டும் மூன்றாம்மாண்டு மாணவர்கள் படிப்பை முடித்து விட்டுச் செல்லும்போது இரண்டாம்மாண்டு மாணவர்களை பொறுப்பில் அமர்த்தி அவர்கள் கையில் இதழை விட்டு செல்கிறோம். இதில் ஆசிரியர் குழுவினர் ஓவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவரவர்க்கு உரிய பணியை வகுக்கிறார்கள்.

எங்கள் இதழில் மாணவர்களின் படைப்புகள், கவிதை, கதை, கட்டுரை,துணுக்குகள், ஜோக்ஸ், கேலிசித்திரங்கள் போன்றவைகளையும் சர்வே, பயோடேட்டா, பிரபலங்களின் பேட்டி, ஆசிரியர் குழுவின் பதில்கள் என பல அம்சங்களையும் வழங்குகின்றோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ilanthoodhu&oldid=1332668" இலிருந்து மீள்விக்கப்பட்டது