Immanuel Abraham3
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே.. இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன்.
தேவனுடைய முன் குறிப்பின்படி கர்த்தருடைய மந்தையாகிய சபையை நடத்துவதற்காக கர்த்தர் என்னை நியமித்தார். அதனிமித்தம் முதலில் என் ஆவிக்குரிய தகப்பனுக்கு முன்னும் தொடர்ந்து பல்வேறு கர்த்தருடைய ஊழியர்கள் முன்னிலையில் என்னைத் தாழ்த்தி அமர்ந்தேன். கர்த்தருடைய ஒழுங்கின்படி கர்த்தருடைய சமூகத்திலே தேவமனிதர்கள் கைகளுக்கு கீழே இருந்த நான் கர்த்தருடைய பணிக்கென்று பிரதிஸ்டை செய்யப்பட்டேன்.
எனவே கர்த்தருடைய மந்தையை நடத்துகிற இந்த பொறுப்பை ஆணவத்தோடே அல்ல அடக்கத்தோடே பெற்றிருக்கிறேன். என்றாலும். மந்தைக்கு ஊறுவிளைவிக்கும் கொடியவர்களையும் மந்தையை சேதப்படுத்த துணிகரம் கொள்ளும் ஓநாய்களிடமும் அடக்கத்துடன், பவ்யமாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை. மேய்ப்பன் அப்படி நடக்க வேண்டியதில்லை.அதை பரிசுத்த வேதாகமமும் அனுமதிக்கவில்லை.
சத்தியம் தெரிந்தவர்கள் சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நிச்சயமாக நம்முடன் இருப்பார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .
தேவனுக்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டு,நியமிக்கப்பட்டுள்ளேன். பெரும்பாலோனோர் விரும்புகிறபடி, வேதசத்தியங்களை மறைத்துவிட்டு,உபதேசிக்க வேண்டிய இடத்தில் உபதேசிக்காமல், கடிந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடிந்து கொள்ளாமல், சீர்திருத்த வேண்டிய இடத்தில் சீர்திருத்தாமல், நீதியைப் படிப்பிக்க வேண்டிய இடத்தில் நீதியைப் படிப்பிக்காமல், இருக்க முடியவில்லை. என்னைச் சுற்றி இருப்பவர்கள் வெகுசிலரே ஆனாலும், அவர்களெல்லாரும் உண்மையை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். காரணம் அவர்களில் பெரும்பான்மையினர் இருளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் நடுவில் சத்தியத்தை சத்தியமாகவும் சுத்தமாகவும் பேசிப் படிப்பிக்கிற வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு இருப்பதால்தான் சிறுவயது முதல் கர்த்தர் என்னை தமதுவசனத்தில் வழிநடத்தினார் என்று நம்புகிறேன்.
இப்பொழுதும் என்னைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு விளக்கிக் காண்பிக்கு முன் கர்த்தருடைய சமூகத்தில் அதிகமாக காத்திருக்கவும் கருத்தாய் வேதத்தை தியாணிக்க வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்பட்ட்டது. இதுவே என்னை கர்த்தருடைய வார்த்தையில் வளரச்செய்தது என்பேன்.
என்னுடைய இணைய பயணத்தில் என்னுடன் இணைந்து பயணித்து வருகிற அனைவருக்காகவும் முன்னவர்களிலும் புதியவர்களிலும் நல்ல செய்திகளை என்னிடம் எதிா்பார்த்து என்னை நினைப்பவர்களுக்காகவும் தொடருகிறவா்களுக்காகவும் கர்த்தரை நன்றியுடன் துதிக்கிறேன் மட்டுமல்ல..
அனுபவசாலிகள் மூத்தவர்களுடைய அன்பான ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன். கர்த்தருக்காக எதையாகிலும் பிரயோஜனமாகச் செய்வோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கிறிஸ்துவுக்காக உங்களுடன்,
பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம்.