பயனர்:Info-farmer/க. அயோத்திதாசர்சிந்தனைகள்-1
Info-farmer/க. அயோத்திதாசர்சிந்தனைகள்-1 | |
---|---|
ஆசிரியர் | பண்டிதர் க. அயோத்திதாசர் |
வெளியீட்டாளர் | தலித் சாகித்யஅகாடமி |
வெளியீட்டாண்டு | 1999 |
பக்கங்கள் | 158 |
அளவு| | 13.42 மெகாபைட்டுகள் |
தமிழ் விக்கிமீடியா-த.இ.க.க. கூட்டுத்திட்டம் | |
பொதுகள உரிமம் (cco 1.0) | |
மூலம்: தமிழ் இணையக் கல்விக் கழகம் |
க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பது க. அயோத்திதாசப் பண்டிதர்[1] வெவ்வேறு ஆண்டுகளில் தனித்தனி நூல்களாகப் பார்ப்பனியத்தை விமர்சித்து எழுதிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாகும். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இந்நூல்களைத் தொகுத்து, தலித் சாகித்ய அகாடமி என்ற பதிப்பகத்தார், 1999 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த விழிப்புணர்வு நூலாகும்.
தமிழில் புறக்கணிக்கப்பட்டிருந்த படைப்புகள் பல இவரால் புதுவிளக்கமும். கவனிப்பும் பெற்றன. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய அயோத்திதாசப் பண்டிதர் கல்வியாளராக, சமூக, மத சீர்திருத்த வாதியாக, அரசியல் சிந்தனையாளராக, மருத்துவராக, படைப் பாளியாக, பத்திரிகை ஆசிரியராக பல தளங்களில் பங்களிப்பு செய்தவர். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் சிந்தனையில் நடை முறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்பதனால் இவருடைய சிந்தனைகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன. குறிப்பாக, சாதியம் குறித்த விழிப்புணர்வை இந்நூல் பிரதானமாக வழங்குகிறது.[2] தமிழ்நாடு அரசு அறிவித்த, நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில், இந்நூலும் ஒன்றாகும். நூலாசிரியரின் எழுத்தாக்கத்தால், இந்திய சட்ட அறிஞர் அம்பேத்கர், பெளத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்து, மன எழுச்சி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. [3]
உள்ளடக்கம்
தொகுநூலாசிரியரின் வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசியல் சமூகம் சார்ந்த சிறு கட்டுரைகளின் தொகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இம்முதல் தொகுதி ஐந்து நூல்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
வ.எண் | தலைப்பு | பக்கஎண் | குறிப்புகள் - கருப்பொருள் சுருக்கம் |
1. | யதார்த்த பிராமண வேதாந்த விவரம் | 1 | |
2. | வேஷ பிராமண வேதாந்த விவரம் | 06 | |
3. | கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி | 85 | |
4. | விபூதி ஆராய்ச்சி | 107 | |
5. | அரிச்சந்திரன் பொய்கள் | 128 |
மேற்கோள்
தொகு- ↑ பண்டிதர் க. அயோத்திதாசரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் நூலகப்பிரிவு
- ↑ கலாநிதி ந. இரவீந்திரனின் ‘இந்துத்துவம் இந்துசமயம் சமூகமாற்றங்கள்’ நூல் பற்றிய கருத்தாடல்கள்
- ↑ பண்டிதர் க. அயோத்திதாசர், க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1, தொகுப்பாளர்: தலித் சாகித்யஅகாடமி, சேலையூர், தொகுப்பாண்டு : 1999. பக். 6
உயவுத்துணை
தொகு- தமிழ்இந்து இணையப்பக்கத் தொடர்கள் -தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- 'ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவெர்ஸிட்டி ப்ரெஸ்', பதிப்பகத்தின், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் திருமதி மினி கிருஷ்ணன் முயற்சியின் விளைவாக, தமிழில் தலித் எழுத்தாளர்களின் படைப்பாக்கம் என்ற நூலை வெளியிட்டிருக்கிறது. எழுத்தாளர் ரவிக்குமாரும், பேராசிரியர் அழகரசனும் இந்நூலைத் தொகுத்தளித்திருக்கிறார்கள்.
வெளி இணைப்புகள்
தொகு- தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்
- இந்நூலாசிரியரின் பிற நூல்களை, பொதுவகத்தில் இருந்து பதிவிறக்க, இதனைச் சொடுக்கவும்
- [ இந்நூலின்] இரண்டாம் பக்கமாக, பொதுகள உரிமம் இணைக்கப்பட்டுள்ளது.
.