பயனர்:Iniya Senthilkumar/மணல்தொட்டி
சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு
தொகுசிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 9.2 % ஆவர், அதாவது 2,84,000 பேர் குடிமக்களாவோ நிரந்தர வாசிகளாகவோ வாழ்கின்றனர். இந்தியர்கள் சிங்கப்பூரின் ஐக்கியப்பட்ட அடையாளத்தில் ஒரு பகுதி ஆவர்கள். இவர்களன்றி நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருக்கும் இந்தியர்களும் வேலை அனுமதிச் சீட்டுடன் பணிசெய்யும் இந்திய ஊழியர்களும் கல்விக் கூடங்களில் பயில வந்திருக்கும் இந்திய மாணவர்களும் பல்லாயிரவர்.
மூன்றாம் தர உலகநாடு என்ற நிலையிலிருந்து , முதல் தர உலக நாடாக சிங்கப்பூர் மாறி உள்ளது என்றால் அது ஒரே இரவில் விளைந்த பயனல்ல, பல காலமாக பலர் பட்ட பாட்டின் விளைவே எனலாம். இவ்வளர்ச்சியில் இந்தியர்கள் என்றும் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.அவற்றுள் மிக இன்றியமையாதத் திருப்புமுனைகளை அமைத்த பங்களிப்புகளை கிழ் காணும் பத்திகளில் கணலாம்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது
தொகுமுதன்முதலில் இங்கிலாந்து அரசு ஒரு காரியம் செய்தது. சிங்கப்பூரில் காடுகளையும், சதுப்பு நிலங்களையும் சீரமைத்து ரோடுகள் போடும் வேலைக்கு ஆள்கள் தேவைப்பட்டது. உடனே இந்தியச் சிறைச் சாலைகளில் அடைபட்டிருந்த கைதிகளை சிங்கப்பூருக்கு ‘நாடு கடத்தினார்கள்’. அதன் விளைவாக அன்று அடர்ந்த காடுகள் இருந்த இடங்களில் இன்று அட்டகாசக் கார்கள் பறக்கும் ராஜபாட்டைகள் , மேலும். சதுப்பு நிலங்கள் இருந்த இடங்களில், இன்று அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிக் கட்டடங்கள் - இவை அத்தனையும், இந்தியச் சகோதரர்களின் உழைப்பு, வியர்வை, ரத்தம் என்று சொன்னால் அது எள்ளளவும் மிகையாகாது. இவர்கள் சிங்கப்பூரில் இருக்கும் மிகப் பழைய தமிழ்க் கோயிலான மாரியம்மன் கோயிலைக் கட்டினார்கள். புனித ஆண்டுரு கோயில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் ஜோஹர் பாலம் செம்பாவங் துறைமுகம், கல்லாங் விமானநிலையம் முதலியவை இந்தியர்களின் கடின உழைப்பின் சின்னங்கள் என்று கூறலாம். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது கல்வித் துறையிலும் தமிழர்கள் செல்வாக்கு ஓங்கியிருந்தது. சிங்கப்பூரின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க வளர்ச்சியின்போது ஆங்கில அரசும், கிறித்துவ சமயப் பரப்பாளர் பள்ளிகளும் தமிழர்களைத்தான் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.
நாராயணப் பிள்ளை
தொகுசிங்கப்பூரில் குடியேறிய நாராயணப் பிள்ளை அரசாங்க்க் கருவூலத்தில் பணியாற்றிக்கொண்டு கட்டுமானப் பணிகளிலும் ஈடுப்பட்டார்.சிங்கப்பூரில் முதல் செங்கற்சூளையை அமைத்தார் அப்பணிகளுக்கு தமிழர்களையே பயண்படுத்திக் கொண்டார். அதன் பயனாக நகர மண்டபமும் மற்றும் பல கோவில்களும் தமிழர்களின் கலைத்திறமைக்கும், கைவண்ணத்திற்கும் சான்றாக இன்றும் நின்று நிலவுகின்றன.
அரசியல்
தொகுதிரு சின்னத்தம்பி ராஜரத்தினம்
தொகுசிங்கப்பூரை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற திரு. லீ குவான் யூ போராடியதைப் போல, சமூக கலாச்சார ரீதியாக பல இன, பன்மொழி , வேறுபட்ட கலாச்சார மக்களிடையே ஒருமித்த கலாச்சார ஒழுங்கையும் என்றென்றும் சலசலப்பற்று சிறப்புடன் விளங்கும் சமூக ஒற்றுமையுணர்வையும் ஏற்ப்படுத்த பலவாறு போராடி, தனது திறம்பட்ட விரிவான திட்டங்களின் மூலம் அவற்றை ஒருங்கிணைத்த பெருமை, திரு சின்னத்தம்பி ராஜரத்தினம் அவர்களைச் சேரும். சிங்கப்பூரின் ஆளூமை அரசியலில் வெளிச்சத்திற்குட்பட்ட சுழலில் இருந்த முதல் தமிழர் அவராவார்.
1965ல் நாடு மலேஷியாவிலிருந்து பிரீந்தபோது, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அப்பொது உலகின் மிக இளைய நாடாக விளங்கிய சிங்ப்பூருக்கு உலகின் எல்லா பகுதிகளிலும் ஆங்கீகாரத்தைப் பெற்றுத்தந்ததில் வெளியுறவுத்துறை அமைச்சரான திரு ராஜாவின் பங்கு மிக இன்றியமையாததாக இருந்தது. சிங்கப்பூரின் உறுதிமொழியை எழுதியவரும் அவரே ஆவார்! இந்தியர்கள் இன்று சிங்கப்பூரில் மேன்மையுற்றிருக்கும் வாழ்க்கை நிலைக்கு, சாதனை கோபுரத்திற்கு ஒரு அஸ்திவார செங்ல்லாய் இருந்தவர், திரு.ராஜா.
திரு. எஸ்.ஆர். நாதன்
தொகுநவீன சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிய மேதகு லீக்வான்யூ அவர்கள்
“இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்”
என்ற குறளைக் காரணமாகக் கொண்டு , சிங்கப்பூர் குடிஅரசின் 6 வது அதிபர் பொறுப்பில் மதிப்பிற்குரிய திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களை அமர வைத்தார். திரு S.R. நாதன் அந்த மிகப் பெரிய பதவியில் ஆற்றலும் அறிவுக் கூர்மையும் கொண்டு, சிறப்பான சாதனைகள் பல புரிந்து, அனுபவங்களின் கடலாகவும் இருந்துள்ளார். திரு. எஸ்.ஆர். நாதன் President’s Challenge என்னும் நன்கொடை இயக்கத்தையும் உருவாக்கினார். இதன் மூலம் வருடன்தோறும் பல வசதிக் குறைந்த சிங்கப்பூரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
திரு.தர்மன் சன்முகரத்ணம்
தொகுதிரு.தர்மன் சன்முகரத்ணம் அவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியயும்,பொருளாதாரத்தையும் உலக பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே செவ்வனே செயல்ப்பட்டு வெற்றிகரமான நிதிஅமைச்சராக இருந்து இந்தியர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் .
சிங்கப்பூர் அரசில் அமைச்சர்களாக பணிபுரிந்த வேறு சில இந்தியர்கள் தேவன்நாயர் (1981ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்), தனபாலன்(வெளிநாட்டுறவு அமைச்சர்), ஜெயகுமார் (உள்துறை அமைச்சர்), நாடாளுமன்ற உறுப்பினர் ஜபார். 1972இல் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் ஜஸ்டிஸ் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக முத்துச்சாமி ராமசாமி எனும் தமிழர் இருக்கின்றார். 1961இல் அமைக்கப்பட்ட தொழிலாளர் கட்சியின் செகரட்டரி ஜெனரலாக ஜெயரத்னம் என்பார் இருக்கின்றார்.
இலக்கியம் - செய்தித்தாள் (தமிழ்)
தொகுகடந்த ஐம்பது ஆண்டு காலத்துக்கும் மேலாகச் சிங்கப்பூரின் வளர்ச்சியோடும் வாழ்வோடும் தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் வை. திருநாவுக்கரசு. தமிழகத்தின் தினத்தாள், விடுதலை ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தோடு தன் 25ஆம் வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர்.
தமிழவேள் கோ. சாரங்கபாணியின் தமிழ்முரசு நாளிதழில் 1951 முதல் 1958 வரை துணையாசிரியராகப் பணிபுரிந்தபோது அவரோடு இணைந்து மொழி, கல்வி, சமுதாய முன்னேற்றம் எனப் பல்வேறு சமூகப் பணிகளில் செயல்பட்டுள்ளார். அதன் பிறகு அரசாங்கத்தின் ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியராகவும் சிங்கப்பூர் வரலாற்று நூல் ஒன்றின் ஆசிரியராகவும் அரசாங்கப் பத்திரிகை உறவுப் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி (தமிழ்)
தொகுசிங்கப்பூர் வானொலியில் சினம், ஆங்கிலம், மலேசிய மொழி ஒலிபரப்புக்குச் சமமாக அதிக அளவில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. நாள்தோறும் காலை 6 முதல் 9 மணி வரை இடைவிடாமல் தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகிறது. ஏ.எம் எனப்படும் மத்திய, சிற்றலை வரிசைகளிலும் எஃப் எம் எனப்படும் ஒலி அலைச்சிர் வரிசையிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. உலகில் முதன் முறையாக சிங்கப்பூரில்தான் இருவழி ஒலிபரப்பில் (எஃப் எம் ஸ்டீரியோ) தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. புத்தகவளம்-இலக்கியச்சோலை என்ற பகுதியில் தமிழ் நூல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்களை நாடகமாக்கி ஒலிபரப்பியது சிங்கப்பூர் வானொலியின் சிறப்பானப் பணியாகும்.
தொலைக் காட்சியிலும் தமிழ்மொழி நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன. சேனல்-8 மூலம் தமிழ் மொழி, மாண்டரின் மொழி நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன. வாரம் ஒரு முறை தமிழ்த் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. தொலைக்காட்சியில் இராமாயண நாட்டிய நாடகம் புதன்கிழமை தோறும் நடந்தது
இதை தவிர சிங்கப்பூரில் உள்ள 49 சினிமா திரை அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரின் உணவில் இந்தியர்களின் பங்கு
தொகுஇனநல்லிணக்கம் நிறைந்த சிங்கப்பூரில் பல வகையான உணவு வகைகளை காணமுடியும். இவ்வளவு உணவு நகைகளின் மத்தியில், சிங்கப்பூரர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் என்ற அடிப்படையில் பார்த்தால், கோழிச்சோறு, நாசி லமாக் அகியவரற்றிர்க்கு கீழ், மூன்றாவது இடத்தில் மீன் தலைக்கறி இடம் பிடிக்கின்றது. இது ஒரு இந்திய உணவு வகை. தென்னிந்தியாவின் கேரளா மாநிலத்தில் தான் இந்த உணவு தோற்றம் பெற்றது. காரமான குழம்பை தயாரித்து, அதில் காய்கறிகளோடு, சிவப்பு ஸ்நாப்பர் மீனின் (Red snapper fish) தலையை, சாதத்துடம் சாப்பிட பலர் விரும்புவர். இந்த உணவை தினமும் பல இனதார் விரும்பி உணவு மையங்களில் சாப்பிடுவதைக் காணலாம்.
Reference
- http://www.tamilsurangam.com/tamil_world/countries/singapore.html#.WNUOFo6x_L8
- http://eraniyanamrithainternetconference.blogspot.sg/2015/03/blog-post_98.html