கோண்டாவில் வடக்கு வாகீஸ்வரியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரால் ஆரம்பிக்கப்பட் கிராமிய இணையத்தளம் வாகீசம் ஆகும். இவர்களது சனசமூக நிலையமான வாகீஸ்வரி என்பதிலிருந்து மருவிய சொல்லாக வாகீசம் உருவாக்கப்பட்டது. தமது கிராமிய அடையாளத்தைப் பேணவேண்டும் என்னும் நோக்கில் இப்பெயர் உருவாக்கப்பட்டது.

வாகீசம் இணையத்தளம் வாகீஸ்வரி இணையம் எனும் பெயரிலே 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. சனசமூக நிலையப் பெயரில் இணையப் பெயர் அமைவதிலுள்ள சிக்கல்கள் கருதி 2009 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் விஜயதசமி தினத்தன்று இணையம் தனது பெயரை வாகீசம் என மாற்றிக்கொண்டது. கோண்டாவில் வடக்கு மக்களின் இணையப் பாய்ச்சலுக்கு வழிகோலிய முதல் இணைய முயற்சியான 2008 ஆம் ஆண்டு ஐப்பசி 27 ஆம் திகதியை வாகீசம் இணையம் தனது ஆண்டு விழாவாக கொண்டாடிவருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jaseekaran&oldid=598845" இலிருந்து மீள்விக்கப்பட்டது