பொதுநூலகம் கைதடி முகப்புத்தோற்றம்

பொதுநூலகம் கைதடி

தொகு

கிராமத்தின் வளர்ச்சிக்காக 1981 இல் கைதடி கிராம சபையினால் தோற்றுவிக்கப்பட்டது. குறிப்பாக பல கல்வியலாளர்களை இந்நூலகம் உருவாக்கித் தந்துள்ளது. அசாதாரண நிலைமைகளின் போதும் தன்னுடைய சேவையை இந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளது.

வரலாறு

தொகு

கைதடி வாழ் புத்திஜீவிகளால் கிராமத்துக்கு ஒரு நூலகம் வேண்டும் என்ற  எண்ணத்தின் கீழ் மாண்புமிகு உள்ளுராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சரின் அறிவுறுத்தல்களின்  பேரில் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் கைதடி கிராம சபையினால்  நிர்மாணிக்கப்பட்ட கைதடி பொதுநூலகம்  யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் மாண்பு மிகு யூ .பீ விஜயகோன் (பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அழைப்பின் பெயரில் பிரதம மந்திரியும் உள்ளுராட்சி வீடமைப்பு நிர்மாண அமைச்சரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான மாண்புமிகு ர .பிரேமதாஸ அவர்களால் 30.10.1981 அன்று திறந்துவைக்கப்பட்டது .

அன்றைய தினம் இந்நூலகமானது 200 நூல்களை மாத்திரமே தன்  வசம் கொண்டிருந்தது. கிராம சபையின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டில்  நூல்கள்  தளபாடங்கள் கொள்வனவு செய்தல் வழக்கமாகும் . அத்துடன் நூலகத்தின் செயற்பாடுகளுக்கு  ஒத்துழைப்பு வழங்குவதற்காக  பதினொரு பெயர்  கொண்ட  ஆலோசனை அபிவிருத்திச் சபை காணப்பட்டது . இவ் ஆலோசனை அபிவிருத்திச்சபை ஆனது 1990ம் ஆண்டு நவீல்ட் பாடசாலை அதிபராக இருந்த திரு க.கோபாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல 6000ம் நூல்களையும் 500க்கு மேற்பட்ட அங்கத்தவர்களையும் கொண்டிருந்தது . இந்நூலகத்தில் சேவை நேரமானது காலை 8.00மணியில் இருந்து இரவு 8.00 மணி ஆக காணப்பட்டது . 2000ம் ஆண்டு ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையின்   காரணமாக இந்நூலகம் முழுமையாக பாதிப்புக்குள்ளானதுடன் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்தது .

2003ம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய நூலகரும்  முன்னாள் நூலக உதவியாளருமான(திருமதி .இ .சிவசுப்ரமணியம்)  அவர்களுடன் இணைந்து கைதடி வாழ் புத்திஜீவிகளால் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட கோரிக்கையின் விளைவாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (United Nations High Commissioner for Refugees) நிதிப்பங்களிப்புடன் நூலகம் மீள திருத்தியமைக்கப்பட்டு வாசகர்களின் பயன்பாட்டிற் கு விடப்பட்டது.  இக்காலப்பகுதியில் 600 நூல்கள் மாத்திரமே காணப்பட்டது .அத்துடன் நூலகர் செல்வி கு .நர்மதாவும்  நூலக உதவியாளராக திருமதி .இ .சிவசுப்ரமணியம் அவர்களும் கடைமை ஆற்றினர் . படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்நூலகமானது பத்திரிகைப்பகுதி இரவல் வழங்கும் பகுதி சிறியவர் பகுதி உசாத்துணைப்பகுதி ஆவணமாயக்கல்பகுதி கணனிப்பகுதி எனப் வகுக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது .  தற்போது 8500 புத்தகங்களையும் 850 அங்கத்தவர்களையும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கின்றது .

2009ம் ஆண்டு நூலக பொறுப்பாளராக இருந்த திரு க.மகேஸ்வரன் அவர்களின் அயராத முயற்சியினால்  மக்களின்  பங்களிப்புடன் கணனி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது .  அத்துடன் நூலகத்தின் வருடாந்த செயட்பாடுகளாக உள்ளுராட்சி வாரம்,உலக புத்தக தினம் ,தேசிய வாசிப்பு மாதம் , நடமாடும் நூலக சேவைகள் ,புத்தக கண்காட்சிகள் , ஏனைய காட்சிப்படுத்தல்கள் , சிறார்களுக்கான வலுவூட்டல்கள்  என்பவற்றை சிறப்பாக செய்து வருகிறது . இது தவிர தனது வாசகர்களின் மூலம் சிறுவர்களுக்கான வலுவாக்கம் ,இணைய வசதி என்பவற்றையும் செய்கிறது. நூல்களுக்கான பகுப்பாக்கம் ,பட்டியலாக்கம் என்பனவும் காணப்படுகின்றது . இந்நூலகமானது தேசிய ரீதியில் தேசியவாசிப்பு மாதத்தை முன்னுட்டு நடாத்தப்பட்ட செயற்திறன் மிக்க செயற்பாடுகள் ஊடாக பல விருதுகளை பெற்றுள்ளது. முன்பள்ளி சிறார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வருடந்தோறும் அவர்களினால் ஆக்கப்பட்ட சஞ்சிகையினை காட்சிப்படுத்தி பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது வழமையாகும்.  தற்போது பத்திரிகைப்பகுதியானது காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை  சேவையாற்றுவதுடன் ஏனைய பகுதிகள் காலை 8 மணியிலிருந்து மாலை 4.45 மணி வரை சேவையாற்றுகிறது .  நூலகராக திருமதி .இராணி சிவசுப்ரமணியமும் நூலக தொழிலாளியாகவும் திருமதி செ .சரவணபவாயினி அவர்களும் கடமை ஆற்றுகிறார்கள்.

பொதுநூலகம் கைதடியில் இதுவரை பணியாற்றியவர்கள் விபரம்

தொகு

  1.

  2. .முருகேசு சிவபாக்கியம்  (நூலகர் 1981)             

  3.திருமதி சி.கமலேஸ்வரி  (நூலக உதவியாளர் 1985)

  4.திருமதி .கு.நவஞானராணி  (நூலக உதவியாளர் 1985 )

  5.திருமதி .இ சிவசுப்ரமணியம்  (நூலக உதவியாளர் 1989)

  6.செல்வி .கு.நர்மதா  (நூலகர் 2003)

  7.செல்வன் சு.தர்மகுலசிங்கம் (நூலக தொழிலாளி 2005 )

  8.திரு .க.மகேஸ்வரன்  (நூலக உதவியாளர் 2009)

  9.திருமதி செ.சரவணபவாஜினி  (நூலக தொழிலாளி 2010)

10.திரு அ .சிவசுதன்   (நூலக தொழிலாளி 2010)

11.திருமதி செ.சரவணபவாஜினி  (நூலக தொழிலாளி 2014)  

12.திருமதி .இ சிவசுப்ரமணியம்  (நூலகர்2015)

விருதுகள்

தொகு

ஒவ்வொரு ஆண்டிலும் நூலகங்களின் செயற்பாட்டினை அவதானித்து தேசிய நூலக ஆவணமாக்கல் சபையி னரால்  விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுவதுண்டு . மொத்தமாக ஆறு வருடங்களிற்கான  விருதுகள்  பொதுநூலகம் கைதடிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jathav_siva&oldid=2804375" இலிருந்து மீள்விக்கப்பட்டது