Jayabalpd001
தமிழ் இலக்கணம்Italic text 1. நாம் பேசும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவை - இலக்கணம் 2. தமிழின் முதல் எழுத்து – அ 3. அ எழுத்தில் உள்ள “1” குறிப்பது – மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூடு 4. “ங்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “க” 5. “ஞ்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “ச” 6. “ண்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “ட” 7. “ந்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “த” 8. “ம்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “ப” 9. “ன்” என்னும் எழுத்துப் பின்னால் வரும் இன எழுத்து – “ற” 10. நட்பு எழுத்துக்களின் வேறு பெயர் - இன எழுத்துக்கள் 11. தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் மொத்தம் - 30 12. தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் மொத்தம் - 12 13. தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் மொத்தம் - 18 14. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் - 216 15. உயிர் எழுத்துக்களில் உள்ள குறில் எழுத்துக்கள் எண்ணிக்கை – 5 16. உயிர் எழுத்துக்களில் உள்ள நெடில் எழுத்துக்கள் எண்ணிக்கை – 7 17. தமிழில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை மொத்தம் - 247 18. தமிழில் உள்ள ஆய்த எழுத்தின் எண்ணிக்கை – 2 19. தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்களின் பெயர் – உடனிலை மெய் மயக்கம் 20. உடனிலை மெய் மயக்கம் தரும் எழுத்துக்கள் - க், ச், த், ப் 21. தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்களின் பெயர் – வேற்றுநிலை மெய் மயக்கம் 22. வேற்று நிலை மெய்மயக்கம்தரும் எழுத்துக்கள் - ர், ழ் 23. தன் எழுத்து, பிற எழுத்து இரண்டுடனும் சேர்த்து வரும் எழுத்துக்கள் - ற், ன் 24. நாட்டுபுற மொழியில் கூறும் பழமொழிகளுக்கு இவ்வாறு பெயர் – சொலவடைகள் 25. ஆனம் என்பதன் பொருள் - குழம்பு 26. நாழி என்பதன் பொருள் - தானியங்களை அளக்கும் படி 27. திறவுகோல் என்பதன் பொருள் - சாவி 28. அகவிலை என்பதன் பொருள் - தானியவிலை 29. தமிழில் ர,ற, ல,ழ,ள, ண,ந,ன ஆகிய எழுத்துக்களை எழுதும்போது பிழையாக எழுதுவதற்கு பெயர் – மயங்கொலிப் பிழை 30. தமிழ்சொற்களில் உள்ள வகைகளின் எண்ணிக்கை – 4 31. தமிழ்சொற்கள் வகைகளில் முதன்மையானவை – பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும் 32. வினை என்பதன் பொருள் - செயல் 33. மரமும், தழையும் என்னும் தொடரில் தழை என்பதன் பொருள் - செடிகொடி 34. மரமும், தழையும் என்னும் தொடரில் தழை என்பது – பெயர்ச்சொல் 35. தழையா வெப்பம் தழைக்கவும் என்னும் தொடரில் தழை என்பது – வினைச்சொல்
http://www.tnpscrock.in/mp3_lession_details.php?subject_id=1&standard_id=6