பயனர்:Jayarockz 2/மணல்தொட்டி

சிங்கப்பூர் ராக் மற்றும் பாப் எனப்படும் மேற்கத்திய இசை முறைகள் முதல்  பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இசை மரபு வரை தோராயமாக ஒரு விரிவான இசைக் கலாச்சாரத்தை கொண்டுள்ளது. அதன் பல்வேறு சமுகங்கள் நாட்டின் மாறுபட்ட இசை மரபுகளை வளர்த்தள்ளன. சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஆகிய முக்கிய இன்ங்களுடன் யுரேசியர்கள் உட்பட்ட மற்ற பல்வேறு இன மக்களையும் சிறிய அளவில் சிங்கப்பூர் கொண்டுள்ளது. எனவே, இங்குப் பொதுவாக விளங்கும் ஆங்கில மொழியின் தாக்கத்தால் மேற்கத்திய பாரம்பரிய இசை சிங்கப்பூரின் கலாச்சார வாழ்க்கையில் ஒரு  முக்கிய பங்கை வகிக்கின்றது. சிங்கப்பூர் நீண்ட காலமாக இசைத்துறையில் ஒரு பிராந்திய மையமாகவும் இருந்து வருகிறது. சிங்கப்பூர் உள்ளூர்ப் பாடகர்களைக் கொண்டு மாண்டரின் சீன பாப் இசை உற்பத்தியை 1960களில் தொடங்கி உள்ளூர் சீன இசைத்தட்டுத் துறை மையமாக வளர்ந்தது.

அண்டை மலேசியா மற்றும் இந்தோநேசியாவில் உள்ள பிரபல இசை வகைகள் சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. பாட்டு நிகழ்ச்சிகளும் மலாய் இசையும் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமானவை.

இந்திய இசை என்று பார்த்தால் தமிழிசை முதலிடம் வகிக்கிறது. சிங்கப்பூரின் பல்வேறு கோவில்களில் திருமுறை இசை தினமும் ஒலிக்கக் கேட்கலாம். இவற்றைப் பாடுவோர் தமிழ் நாட்டில் இருந்து வந்த நிபுணர்கள் ஆவர். தவிர, தேவார இசை நிகழ்ச்சிகள் பல அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவற்றில் தமிழகத்திலிருந்து வரும் ஓதுவார்கள் முதல் உள்ளூர் திருமுறை மாணவர்கள்வரை பலரும் பாடக் கேட்கலாம். பெரும்பாலும் இவை, நவராத்திரி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நடைபெறும்.

மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் உட்பட்ட பல கலை அமைப்புகள் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. 22, 23 ஏப்ரல் 2017-இல் எஸ்பிலனாட் அரங்கத்தில் நடைபெறும் இசை விழா சிங்கப்பூரின் இந்திய இசை மரபுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்கு தமிழ்த் திருமுறை இசைக் கச்சேரியுடன்,  இந்தஸ்தானி இசையும் ஐரோப்பிய பக்தி இசையும் இடம்பெறுகிறது. சிங்கையில் பிரபலமாக இருக்கும் பிற இந்திய இசை வடிவங்கள் பஜன் மற்றும் பாங்ரா. பாங்கரா இசைக் குழுக்கள் பல இன விழாக்களில் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதைக் காணலாம்.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jayarockz_2/மணல்தொட்டி&oldid=2251150" இலிருந்து மீள்விக்கப்பட்டது