Jeevajeevan023
"ஆசிவக அருட்சித்தர்" ஆய்மூர் ஐயாறு சுவாமிகள் வரலாறு. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவில் உள்ள ஆய்மூர் கிராமத்தில் உள்ளது அய்யாறு சித்தர் ஜீவசமாதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆய்மூர் கிராமத்தில் அய்யாறு சித்தர் வாழ்ந்தார் என்றும் அவர் அங்குள்ள அய்யனார்வெளி என்னும் இடத்தில் ஜீவசமாதியாக உள்ளார். ஆதித்தமிழர் மயன் வகுத்த "ஐந்திரம்"நூலை கற்று பிரபஞ்சத்தை பஞ்சபூதத்தால் ஆற்றுப்படுத்தும் லிங்க வடிவ சிவத்தை வழிபட்டார்.↵தனது சீடர்களான வடுவூர் சம்பந்த மூர்த்தி சுவாமிகள் மற்றும் ஆய்மூர். வேங்கட.நடேசபுரையர் ஆகியோரிடம் ↵நினைத்ததை நிறைவேற்றும் "சக்கரம் ஏறல்" என்னும் வாசியோகப் பயிற்சியை கற்றுத்தந்து,↵தான் ஜீவசமாதி ஆக போகிற ஆடி பரணி நாளை முன்னறிவித்தார்.
அதனால் தன் ஜீவ சமாதி மீது லிங்கத்தை பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றும் கூறினார்.அதன் பின்னர் ஜீவசமாதி மீது லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை சத்தமாக வேண்டுகின்றனர் இவ்வாறு வேண்டுவதால் அய்யாறு சித்தர் மூலம் அந்த சிவனிடம் அந்த செய்தி சிவனை அடைந்து விரைவில் நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது. இங்கு பௌர்ணமி அன்று மாலை வேளையில் பூஜைகள் செய்யப்படுகின்றன மேலும் இரவு நேரத்தில் தங்கி தியானம் செய்தால் வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை இந்த அய்யாறு சித்தர் ரோஜாக்கள் நிறைந்த மாலையும் கருப்பு நிற திராட்சை டைமண்ட் கற்கண்டு மற்றும் விதைகள் நீீீக்கப்பட்ட பேரிட்சை பழம் ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்து வேண்டும். நீங்கள் இங்கே அபிஷேகம் செய்ய விரும்பினால் பௌர்ணமி அன்று மாலை வேளையில் அபிஷேக பொருட்கள் வாங்கி வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு↵(வேங்கட.நடேசபுரையர் வாரிசு) ஜீவஜீவன் ↵9786462733